ETV Bharat / state

திருமணத்தில் மகளுக்குத் தர வைத்திருந்த 100 சவரன் நகைகள் கொள்ளை! - கல்யாண வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை

வேலூர்: வாலாஜாபேட்டை அருகே மணமகளுக்கு சீர்வரிசையாக கொடுக்க வைத்திருந்த 100 சவரன் நகைகள், மூன்று லட்சம் ரூபாய் பணம் ஆகியவை கொள்ளைப் போன அதிர்ச்சியில் தாய் மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

gold jewels theft
author img

By

Published : Nov 10, 2019, 7:14 PM IST

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த கிராமணி தெருவைச் சேர்ந்த தம்பதி சரவணன் - கோமளா. இவர்களின் மகள் பவித்ராவிற்கு இன்று ஆரணியில் திருமணம் நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக நேற்று சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு ஆரணிக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், இன்று வீட்டிற்கு வந்தபோது பூட்டிய வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக சிலர் அளித்த தகவலின்பேரில் உடனடியாக சரவணன் அங்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 100க்கும் மேற்பட்ட சவரன் தங்க நகைகள், மூன்று லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

மேலும், கொள்ளையர்கள் கொள்ளையடிக்கப்பட்ட வீட்டைச் சுற்றிலும் மிளகாய்ப் பொடி தூவி விட்டுச் சென்றுள்ளனர். மகளின் கல்யாணத்திற்காக சேர்த்து வைக்கப்பட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தைக் கேள்விப்பட்ட கோமளா திருமண மண்டபத்தில் மயக்கமடைந்தார்.

இதனையடுத்து சரவணன் வாலாஜாபேட்டை காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

100 சவரன் நகைகள் கொள்ளை

முழு விசாரணைக்குப் பிறகே கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு மற்றும் கொள்ளை போனப் பொருட்கள் குறித்த முழு விவரம் தெரிய வரும் எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரவணனின் குடும்ப வழக்கப்படி திருமணம் முடிந்த பிறகு வீட்டில் வைத்து தான், நகைகளை மண மகளுக்குப் போடுவார்கள். அதன்படி மகளின் திருமணம் முடிந்த நிலையில் இன்று நகைகளை தனது மகள் கழுத்தில் போட்டு அழகு பார்க்கலாம் என்று ஆசையோடு வீட்டிற்கு வந்தனர். ஆனால், வீட்டில் நகைகள் கொள்ளை போன சம்பவம் சரவணன் - கோமளா தம்பதியிடையே மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க:

உடன் பிறந்த சகோதரனைக் கழுத்தை அறுத்து கொலை செய்த கொடூரம்!

Intro:வேலூர் மாவட்டம்

வாலாஜாபேட்டை அருகே கல்யாண வீட்டில் 100 சவரன் நகைகள் ரூ 3 லட்சம் பணம் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை - மணமகளுக்கு சீர் வரிசையாக வைத்திருந்த நகைகள் கொள்ளை போன அதிர்ச்சியில் தாய் மயக்கம்Body:வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த கிராமணி தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கோமளா. இவர்களின் மகள் பவித்ராவிற்கு இன்று ஆரணியில் திருமணம் நடைபெற்றது. இதற்காக வரவேற்பு நிகழ்ச்சிக்காக நேற்று சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆரணிக்கு வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளனர் இந்த நிலையில், இன்று வீட்டிற்கு வந்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக சிலர் அளித்த தகவலின்பேரில் உடனடியாக சரவணன் அங்கு சென்று பார்த்தார். அப்போது வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 100க்கும் மேற்பட்ட சவரன் தங்க நகைகள் மற்றும் மூன்று லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது மேலும் கொள்ளையர்கள் கொள்ளை அடிக்கப்பட்ட வீட்டை சுற்றிலும் மிளகாய் பொடி தூவி விட்டு சென்றுள்ளனர் இதனை கேள்விப்பட்டு அதிர்ச்சியில் கோமளா மயக்கம் அடைந்தார். சரவணன் வாலாஜாபேட்டை போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். காவல்துறையினர் விரைந்து வந்து கொள்ளை சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் முழுமையான விசாரணைக்கு பிறகே கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு மற்றும் கொள்ளை போன பொருட்கள் குறித்து முழு விவரம் தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரவணனின் குடும்ப வழக்கப்படி திருமணம் முடிந்த பிறகு வீட்டில் வைத்து தான் நகைகளை மணமகளுக்கு போடுவார்கள. அதன்படி சரவணன் தனது மகள் திரிமணத்துக்கு போடுவதற்காக கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த 100 சவரன் நகைகளை வீட்டீல் வைத்து விட்டு சென்றுள்ளார். திருமணம் முடிந்த நிலையில் இன்று நகைகளை தனது மகள் கழுத்தல் போட்டு அழகு பார்க்கலாம் என்று ஆசையோடு வீட்டிற்கு வந்தனர். ஆனால் வீட்டில் நகைகள் கொள்ளை போன சம்பவம் சரவணன் - கோமளா தம்பதியிடையே மீளா அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.