ETV Bharat / state

'இளைஞர்களின் கைகளில் கிராமங்களின் எதிர்காலம்' - இளங்கோ ரங்கசாமி - etv bharat

இந்தியாவின் எதிர்காலம் எப்படி இளைஞர்களின் கைகளில் உள்ளதோ, அதேபோன்று கிராமங்களின் எதிர்காலமும் இளைஞர்களின் கைகளில்தான் உள்ளது என கிராம தன்னாட்சி அறக்கட்டளையின் நிறுவனரான இளங்கோ ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி விழிப்புணர்வு கூட்டம்
உள்ளாட்சி விழிப்புணர்வு கூட்டம்
author img

By

Published : Aug 23, 2021, 7:25 AM IST

வேலூர்: 2020ஆம் ஆண்டு நடைபெற்ற கிராம உள்ளாட்சித் தேர்தலில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தயாராக உள்ள ஆண்கள், பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காந்தியம் முன்னெடுப்போர் கூட்டியக்கத்தின் சார்பாக உள்ளாட்சி விழிப்புணர்வு கூட்டம் நடைபெறுகிறது.

இதன் ஒரு பகுதியாக வேலூர் ரங்காபுரத்தில் உள்ள தனியார் உள்ளரங்கில் இன்று (ஆக.22) உள்ளாட்சி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தன்னாட்சி அமைப்பின் பொதுச்செயலாளரான நந்தகுமார் சிவா மற்றும் கிராம தன்னாட்சி அறக்கட்டளையின் நிறுவனரான இளங்கோ ரங்கசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

உள்ளாட்சி விழிப்புணர்வு கூட்டம்

இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள முன்மாதிரி கிராம ஊராட்சிகளான நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கிராம ஊராட்சி, தர்மபுரி மாவட்டம் சிட்லிங்கி கிராம ஊராட்சி, திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் கிராம ஊராட்சி, திருவள்ளூர் மாவட்டம் பாண்டேஸ்வரம் கிராம ஊராட்சி போன்ற ஊராட்சிகளில் தற்போது நடைமுறையில் உள்ள சில முன்மாதிரி திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் நேர்மையான முறையில் போட்டியிட வேண்டும் என்றும் பல உள்ளாட்சி வல்லுநர்கள் மற்றும் கிராம உள்ளாட்சி தலைவர்கள் உரையாற்றினர்.

இளங்கோ ரங்கசாமி பேட்டி

கிராமங்களின் எதிர்காலமும் இளைஞர்களின் கைகளில்தான்

அப்போது கிராம தன்னாட்சி அறக்கட்டளையின் நிறுவனர் இளங்கோ ரங்கசாமி (குத்தம்பாக்கம் இளங்கோ) ஈடிவி பாரத்திடம் பேசுகையில், "இந்தியாவின் எதிர்காலம் எப்படி இளைஞர்களின் கைகளில் உள்ளதோ, அதேபோன்று கிராமங்களின் எதிர்காலமும் இளைஞர்களின் கைகளில்தான் உள்ளது என்பது உண்மை.

தற்போது உள்ள உள்ளாட்சி அமைப்பின்படி 21 வயது பூர்த்தியான இளைஞர்கள் நேரடியாக போட்டியிட்டு வார்டு உறுப்பினராகவும், பஞ்சாயத்து தலைவர்களாகவும் ஆகலாம். இல்லை, எங்களுக்கு அனுபவம் போதாது என்று நினைத்தாள் அனுபவமிக்க நல்ல மனிதர்களை அடையாளம் கண்டு அவர்களை தேர்தலில் நிற்க வைத்து வெற்றிபெற செய்து, அவர்களுக்கு துணையாக இருந்து நன்மைகளை செய்யலாம்.

இளைஞர்கள் இது போன்ற அடித்தட்டு ஜனநாயகத்தில் பங்கேற்கும்போது அவர்களுக்கு ஒரு சிறந்த அரசியல் அனுபவம் கிடைக்கின்றது. இது ஒரு மிகப்பெரிய விஷயம். இந்த உள்ளாட்சி அமைப்பில் இளைஞர்கள் பங்கேற்கும்போது நேரடியாக சமூக பொருளாதார வளர்ச்சியில் ஈடுபடுகின்றனர். படித்த இளைஞர்கள் உள்ளாட்சி அமைப்பில் சேர்ந்து அவர்கள் கற்றுக்கொண்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தங்களது கிராமத்தை ஒரு முன்மாதிரி கிராமமாக மாற்றினால் அந்த கிராமம் முன்னேறும்.

மிகப்பெரிய எதிர்காலம்

இதுபோன்று உழைப்பதன் மூலமாக இளைஞர்கள் தங்களை ஒரு மிகப்பெரிய எதிர்காலத்திற்கு தயார்படுத்திக்கொள்கிறார்கள். இதற்கான வாய்ப்பை பஞ்சாயத்து தருகிறது.

ஒரு இளைஞர் தன்னுடைய கிராமத்தை ஒரு முன்மாதிரி கிராமமாக மாற்ற வேண்டுமென்றால் அந்த இளைஞருக்கு உள்ளாட்சி குறித்த புரிதல் மற்றும் ஆவல் வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள முன்மாதிரி கிராமங்களை நேரில் சென்று பார்க்கலாம் அல்லது தங்கள் கையில் உள்ள தொழில்நுட்பத்தை கொண்டு தரவுகளைத் திரட்டி அதன் மூலம் தமது கிராமம் இதற்கெல்லாம் தகுதி படைத்ததா என்பதை பார்க்கலாம். அவர்கள் படிக்கும், பணியாற்றும் அனுபவத்தை இந்த உள்ளாட்சியில் பயன்படுத்தலாம்" என்றார்.

நந்தகுமார் சிவா பேட்டி

பெண்கள் அதிகளவில் போட்டியிட வேண்டும்

மேலும் தன்னாட்சி அமைப்பின் பொதுச்செயலாளரான நந்தகுமார் சிவா பெண்கள் உள்ளாட்சி தேர்தலில் அதிகளவில் போட்டியிட வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.