ETV Bharat / state

புறநானூற்றுக்கும் பட்ஜெட்டிற்கும் என்ன சம்பந்தம் ? துரைமுருகன் கேள்வி - புறநானூறு

வேலூர்: பட்ஜெட்டுக்கும் புறநானூறுக்கும் என்ன சம்பந்தம் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

durai murugan
author img

By

Published : Jul 7, 2019, 11:37 AM IST

பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் மீண்டும் நடைபெறவுள்ளது. இதையடுத்து, தேர்தல் பணிகளில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதிக்கு திமுக சார்பில் அக்கட்சி பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, துரைமுருகன் தலைமையில் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில், திமுக எம்.எல்.ஏக்கள் நந்தகுமார் காந்தி, வில்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தாமதப்படுத்தும் தமிழக அரசைக் கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டம் முடிந்த பிறகு துரைமுருகன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "கடந்த முறை தேர்தல் அறிவிக்கப்பட்ட போது எங்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் எதுவும் எடுக்கவில்லை என்று அவர்களே எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தனர். எங்களால் தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்று கூறுவது சரியான வாதம் இல்லை. வரும் 12ஆம் தேதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மனுத் தாக்கல் செய்வார்.

திமுக பொருளாளார் துரைமுருகன் பேட்டி

மத்தியில் நிலையான ஆட்சி வந்திருக்கலாம் ஆனால் அது நிலையான ஆட்சியா என்பது போகப் போகத்தான் தெரியும். தமிழகத்தில் தற்போது தற்காலிக ஆட்சிதான் நடைபெற்று வருகிறது விரைவில் ஆட்சி மாற்றம் வரும்.

அரசியல் அறிஞர்கள் பொருளாதார நிபுணர்கள் என எல்லோரும் மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்றும், ஒரு சில கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மட்டுமே பயனளிப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த பட்ஜெட் மூலம் மக்கள் மிகப் பெரிய ஏமாற்றத்தை அடைந்துள்ளனர்.

நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது புறநானூறு வரிகள் பற்றிக் கூறியுள்ளார். புறநானூறுக்கும் பட்ஜெட்டிற்கும் என்ன சம்பந்தம் என்று அவர் விளக்கம் அளித்துள்ளாரா ? பிசிராந்தையார் என்பதைக் கூட அவரால் சொல்ல முடியவில்லை ஆனால் தமிழ்நாட்டுக்காரி என்று சொல்கிறார்" என்று விமர்சித்தார்.

Intro:Body:

dURAI MURUGAN

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.