ETV Bharat / state

சவுக்குத் தோப்பில் கொத்தடிமைகளாக இருந்த குடும்பம் மீட்பு! - family

வேலூர்: அரக்கோணம் அருகே சவுக்குத் தோப்பில் கொத்தடிமைகளாக இருந்த குடும்பத்தினரை ராணிப்பேட்டை துணை ஆட்சியர் மீட்டார்.

கொத்தடிமைகளாக இருந்த குடும்பம் மீட்பு
author img

By

Published : Apr 25, 2019, 9:54 AM IST

வேலூர் மாவட்டம் அரக்கோணம் வட்டம் வளர்புரம் கிராமம் முத்து மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி அங்கம்மாள் இவர்களுக்கு பாளையம் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சண்முகம் தனது குடும்பத்தினருடன் உளியம்பாக்கம் காரப்பந்தாங்கல் கிராமத்தில் உள்ள சவுக்கு தோப்பு ஒன்றில் கொத்தடிமையாக வேலை செய்து வருவதாக ராணிப்பேட்டை துணை ஆட்சியர் இளம்பகவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் நேற்று ( புதன்கிழமை) துணை ஆட்சியர் இளம்பகவத் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். விசாரணையில், மேற்கண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயலலிதா என்பவரிடம் முன் பணம் பெற்றுக்கொண்டு 11 ஆண்டுகளாக கொத்தடிமையாக வேலை பார்த்துவந்தது தெரிந்தது. மொத்த கடன் தொகையாக ஜெயலலிதாவிடம் சண்முகம் 2.70 லட்சம் வாங்கியதாகவும் அந்தக் கடனை செலுத்தினால்தான் வீட்டுக்கு அனுப்ப இயலும் என்றும் கட்டாயப்படுத்தி ஜெயலலிதா, சண்முகம் மற்றும் அவரது குடும்பத்தாரை கொத்தடிமையாக நடத்தியுள்ளார்.

சவுக்குத் தோப்பு,குடும்பம்,மீட்பு ,
கொத்தடிமைகளாக இருந்த குடும்பத்தினரை ராணிப்பேட்டை சார் ஆட்சியர் மீட்ட போது

மேலும், வேலைக்கு உரிய சம்பளம் வழங்காமல் குறைவான தொகையையே வழங்கியுள்ளார். அதையும் தன்னிடம் வாங்கிய கடனுக்காக ஜெயலலிதா பிடித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. விசாரணை முடிவில் ராணிப்பேட்டை துணை ஆட்சியர் இளம்பகவத், சண்முகம் குடும்பத்தினரை கொத்தடிமை தொழிலிருந்து மீட்டு அவர்களது கடன் தொகையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இந்த ஆய்வில் அரக்கோணம் வட்டாட்சியர் ஜெயக்குமார், அரக்கோணம் கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் அமுதா தொழிலாளர் நல துணை ஆய்வாளர் கமலா, உதவி ஆய்வாளர் அன்னப்பூரணி ஆகியோர் உடனிருந்தனர்.

Intro:வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே சவுக்குத் தோப்பில் கொத்தடிமைகளாக இருந்த தொழிலாளர்கள் மீட்பு

Body:வேலூர் மாவட்டம் அரக்கோணம் வட்டம் வளர்புரம் கிராமம் முத்து மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி அங்கம்மாள் இவர்களுக்கு பாளையம் என்ற மகன் உள்ளார் இந்நிலையில் சண்முகம் தனது குடும்பத்தினருடன் உளியம்பாக்கம் காரப்பந்தாங்கல் கிராமத்தில் உள்ள சவுக்கு தோப்பு ஒன்றில் கொத்தடிமையாக வேலை செய்து வருவதாக ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத்துக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது இந்த தகவலின் அடிப்படையில் இன்று சார் ஆட்சியர் இளம் பகவத் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார் விசாரணையில் மேற்கண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயலலிதா என்பவரிடம் முன்பணம் பெற்றுக்கொண்டு 11 ஆண்டுகளாக கொத்தடிமையாக வேலை பார்த்து வந்தது தெரிந்தது மொத்த கடன் தொகையாக ஜெயலலிதாவிடம் சண்முகம் 2.70 லட்சம் வாங்கியதாகவும் அந்தக் கடனை செலுத்தினால் தான் வீட்டுக்கு அனுப்ப இயலும் என்றும் கட்டாயப்படுத்தி ஜெயலலிதா சண்முகம் மற்றும் அவரது குடும்பத்தாரை கொத்தடிமையாக நடத்தியுள்ளார் மேலும் வேலைக்கு உரிய சம்பளம் வழங்காமல் குறைவான தொகையை வழங்கியுள்ளார். அதையும் தன்னிடம் வாங்கிய கடனுக்காக பிடித்துக் கொண்டுள்ளார் இதனால் சண்முகம் மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார் விசாரணை முடிவில் ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத், சண்முகம் குடும்பத்தினரை கொத்தடிமை தொழிலிருந்து மீட்டு அவர்கள் கடன் தொகையை ரத்து செய்து உத்தரவிட்டார் இந்த ஆய்வில் அரக்கோணம் வட்டாட்சியர் ஜெயக்குமார் அரக்கோணம் கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் அமுதா தொழிலாளர் நல துணை ஆய்வாளர் கமலா உதவி ஆய்வாளர் அன்னபூரணி ஆகியோர் உடன் இருந்தனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.