வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள சாரதி மாளிகையில் அமைந்துள்ள தீபம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்து, இந்தாண்டு புதிதாக வந்துள்ள புதிய ரக சேலைகளை அவர் பார்வையிட்டார்.
கோ-ஆப்டெக்ஸின் வேலூர் மண்டலத்தின் கீழ் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, சித்தூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 15 விற்பனை நிலையங்கள் இயங்குகின்றன.
கடந்த ஆண்டு தீபாவளிக்கு, கோ-ஆப்டெக்ஸ் உடைகள் ரூ.10.92 கோடி விற்பனை செய்யப்பட்டன. இந்தாண்டு தீபாவளி பண்டிகை விற்பனை இலக்காக ரூ.13 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தீபம் கோ-ஆப்டெக்ஸின் விற்பனை நிலையம் இந்தாண்டுக்கு 3.10 கோடி ரூபாய் விற்பனையை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இதையும் படிக்க: தீபாவளி பண்டிகைக்காக 12,575 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!