ETV Bharat / state

காரில் லிப்ட் கொடுப்பது போல் நகை பறிப்பு! - வேலூர் நகை பறிப்பு

வேலூரில் காரில் லிப்ட் கொடுப்பது போல் 2 பெண்களை காரில் ஏற்றி, அவர்களிடமிருந்து 10 சவரன் நகையை மிரட்டி பறித்து, காரிலிருந்து கீழே தள்ளிவிட்டு சென்ற அடையாளம் தெரியாத நபரை காவல் துரையினர் தேடி வருகின்றனர்.

chain snatched from ladies by giving a lift to the car  chain snatching  vellore chain snatching  vellore news  vellore latest news  வேலூர் செய்திகள்  வேலூரில் காரில் லிப்ட் கொடுப்பது போல் நகை பறிப்பு  காரில் லிப்ட் கொடுப்பது போல் நகை பறிப்பு  நகை பறிப்பு  வேலூர் நகை பறிப்பு  gold robbery
நகை பறிப்பு
author img

By

Published : Jul 24, 2021, 1:51 PM IST

வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன், மோட்டார் சைக்கிள் ஷோரூமில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சுஜாதாவும் (45), உறவினரான சிவபூஷனமும் (67) நேற்று (ஜூலை 23) காலை வேலூர் மாவட்டம் குடியாதத்திலுள்ள குலதெய்வம் கோவிலுக்கு செல்வதற்காக சோளிங்கர் பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது சிவப்பு நிற காரில் வந்த ஒருவர் இவர்களிடம் 'எங்கு செல்கிறீர்கள்' எனக் கேட்டுள்ளார். அப்போது சுஜாதா குடியாத்தம் செல்வதாக கூறியுள்ளார். அதற்கு அந்த ஓட்டுநர் 'நானும் குடியாத்தம் செல்கிறேன் காரில் ஏறுங்கள் இருவரையும் அங்கு விட்டுவிடுகிறேன். 150 ரூபாய் கொடுத்தால் போதும்' எனத் தெரிவித்துள்ளார்.

நகை பறிப்பு

இதனை நம்பி சுஜாதாவும், சிவபூஷனமும் காரில் ஏறியுள்ளனர். இதையடுத்து கார் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே சென்றதும், திடீரென காரை மீண்டும் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திரும்பி வேலூர் நோக்கி ஓட்டியுள்ளார்.

இதனால் சுஜாதா, சிவபூசனம் இருவரும் அதிர்ச்சி அடைந்து, “குடியாத்தத்திற்கு செல்லாமல் வேலூர் நோக்கி மீண்டும் செல்கிறீர்கள்” என கேட்டுள்ளனர். அதற்கு ஓட்டுநர் எதுவும் கூறாமல் காரை வேகமாக வேலூர் நோக்கி ஓட்டிவந்துள்ளார்.

பின்னர் திடீரென சிவபூசனம் அணிந்திருந்த செயின், தங்க வளையல்களை மிரட்டி பறித்துள்ளார். மேலும் சுஜாதா அணிந்திருந்த நகைகளை பறிக்க முயன்றபோது, சுஜாதா அவரிடமிருந்து நகைகளை பாதுகாக்க போராடியுள்ளார். காருக்குள் சிக்கிக்கொண்ட பெண்கள் இருவரும் அலறி கூச்சலிட்டுள்ளனர்.

மேலும் “நீங்கள் அணிந்துள்ள நகைகளை என்னிடம் கழட்டி கொடுத்து விடுங்கள். உங்களை உயிரோடு விட்டு விடுகிறேன். இல்லையென்றால் உங்களை எங்காவது கொண்டு சென்று கொலை செய்து விடுவேன்” என ஓட்டுநர் மிரட்டல் விடுத்துள்ளார்.

chain snatched from ladies by giving a lift to the car  chain snatching  vellore chain snatching  vellore news  vellore latest news  வேலூர் செய்திகள்  வேலூரில் காரில் லிப்ட் கொடுப்பது போல் நகை பறிப்பு  காரில் லிப்ட் கொடுப்பது போல் நகை பறிப்பு  நகை பறிப்பு  வேலூர் நகை பறிப்பு  gold robbery
இரண்டு பெண்களிடம் நகை பறிப்பு...

காரிலிருந்து தள்ளிவிட்ட ஓட்டுநர்

இதற்கிடையில், கெங்கையம்மன் கோயில் எதிரே சுரங்கப்பாதை பணிகள் நடைபெறும் இடத்தில் ராட்சத லாரிகள் நின்றுள்ளன. அதை சரிசெய்யும் பணியில் போக்குவரத்து காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

அவர்களை கண்டதும் சுதாரித்துக்கொண்ட கார் ஓட்டுனர் எப்படி தப்பிப்பது என யோசித்தபடி காரை மெதுவாக ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது காரிலிருந்து சுஜாதா வெளியே குதித்துள்ளார். சாலையில் உருண்டு விழுந்த அவர் அலறி கூச்சலிட்டுள்ளார். அது சமயத்தில் ஓட்டிநர் காரில் இருந்த சிவபூசனத்தை வெளியே தள்ளிவிட்டு வேகமாக காரை ஓட்டி சென்றுள்ளார்.

இரண்டு பெண்கள் காரில் இருந்து விழுவதைக் கண்ட சத்துவாச்சாரி பொதுமக்கள் காரை நோக்கி வேகமாக ஓடினர். மேலும் அங்கிருந்த போக்குவரத்து காவல் துறையினர், காரை மடக்கி பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர் தப்பிச் சென்றுள்ளார்.

காவல்துறையினர் விசாரணை

காரில் இருந்து விழுந்த இரண்டு பெண்களுக்கு தலை, கை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. தகவலறிந்த சத்துவாச்சாரி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இருவரையும் மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இதையடுத்து இரண்டு பெண்களும் காரில் வந்த அடையாளம் தெரியாத நபர் லிப்ட் கொடுப்பது போல நடித்து தங்களை அடித்து 10 பவுன் நகைகளை பறித்து சென்றுவிட்டதாக புகார் அளித்தனர். இது குறித்து காவலதுறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நகைபறித்து தப்பிச் சென்ற அடையாளம் தெரியாத நபரை பிடிக்க கார் பதிவு எண் மூலம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பாலியல் தொல்லை, ரவுடீசம் போன்ற பல்வேறு வழக்குகளில் மூவர் மீது குண்டாஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.