ETV Bharat / state

பணியில் இருக்கும்போதே பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு! - காவல் துறையினர்

வேலுார்: பணியில் இருக்கும் போதே பேருந்து ஓட்டுநர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். பணிச்சுமை காரணமாகவே அவர் உயிரிழந்திருக்கக் கூடும் என  சக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

bus-driver-death
author img

By

Published : Jun 12, 2019, 3:19 PM IST

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ் (40). இவர் விழுப்புரம் மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலூர் பிரிவில் ஓட்டுநராக பணியாற்றிவந்தார். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் தர்மராஜ் பணி செய்வதற்காக வேலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அவருக்கு வேலூரில் இருந்து தாம்பரம் செல்லும் பேருந்தில் பணி ஒதுக்கப்பட்டிருந்தது.

பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு

இதையடுத்து பணிப் பதிவேட்டில் கையெழுத்திட தர்மராஜ் பேருந்தில் ஏற முயன்றபோது திடீரென மயங்கி விழுந்தார். இதைக் கவனித்த சக ஊழியர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பின்னர் சிகிச்சை பெற்ற தர்மராஜ் மீண்டும் பேருந்து நிலையத்திற்கு வந்து பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளார். அப்போது மீண்டும் தர்மராஜ் மயங்கி விழுந்ததை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் பதறிப்போன ஊழியர்கள், இது குறித்து திருச்சியில் உள்ள தர்மராஜின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அவரின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. பணியில் இருந்தபோது அரசுப் பேருந்து ஓட்டுநர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் வேலூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் உயிரிழந்த தர்மராஜ் தொடர்ச்சியாக விடுமுறை இன்றி ஐந்து நாட்களாக பணி செய்து வந்ததாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல், உடல் நிலை மோசம் காரணமாகவே அவர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று சக தொழிலாளர்கள் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக வேலூர் வடக்கு காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Intro:வேலூரில் அரசு பஸ் டிரைவர் பணியில் இருந்தபோது மர்மமான முறையில் மரணம்

பணிச்சுமை காரணம் என சக தொழிலாளர்கள் குற்றச்சாட்டு

Body:திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ்(40) இவர் விழுப்புரம் மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் வேலூர் பிரிவில் டிரைவராக பணியாற்றி வந்தார் இந்த நிலையில் இன்று வழக்கம் போல் தர்மராஜ் பணி செய்வதற்காக வேலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார் அவருக்கு வேலூரில் இருந்து தாம்பரம் செல்லும் பஸ்ஸில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது இதையடுத்து பணிப் பதிவேட்டில் கையெழுத்திட் தர்மராஜ் பஸ்ஸில் ஏற முயன்றபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார் இதை கவனித்த சக ஊழியர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் பின்னர் சிகிச்சை பெற்ற தர்மராஜ் மீண்டும் பேருந்து நிலையத்திற்கு வந்து பஸ்சில் ஏறி அமர்ந்துள்ளார் அப்போது மீண்டும் தர்மராஜ் மயங்கி விழுந்ததை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர் பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர் இதனால் பதறிப்போன ஊழியர்கள் மற்றும் அதிகாங சம்பவம் குறித்து திருச்சியில் உள்ள தர்மராஜின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் மேலும் தர்மராஜின் சடலம் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது பணியில் இருந்தபோது அரசு பஸ் டிரைவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் வேலூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதற்கிடையில் உயிரிழந்த தர்மராஜ் தொடர்ச்சியாக விடுமுறை இன்றி 5 நாட்களாக பணி செய்து வந்ததாகவும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் உடல் நிலை மோசம் காரணமாகவே தர்மராஜ் உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் சக தொழிலாளர்கள் குற்றம் சாட்டினார் இதுதொடர்பாக வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.