ETV Bharat / state

திருமணமான மூன்று மாதத்தில் ராணுவ வீரர் தற்கொலை!

வேலூர்: மனைவி பிரிந்து சென்றதால் திருமணமான மூன்றே மாதத்தில் ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்துகொண்ட ராணுவ வீரர்
தற்கொலை செய்துகொண்ட ராணுவ வீரர்
author img

By

Published : May 14, 2020, 6:13 PM IST

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி ரெங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேந்திரநாத், இவர் இந்திய ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சுரேந்திரநாத்துக்கும், ராதிகா என்ற பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்பு பணிக்கு திரும்பிய அவருக்கு ஊரடங்கு அமலுக்கு முன்பு விடுமுறை கிடைத்து கடந்த மாதம் சொந்த ஊருக்கு வந்தார்.

இந்நிலையில் வீடு திரும்பிய சுரேந்திரநாத்திற்கும் அவரது மனைவிக்குமிடையே மனவருத்தம் ஏற்பட்டு தகராறில் முடிந்துள்ளது. இதனால் அவரது மனைவி கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் மனைவியை விட்டு தனியாக இருந்த சுரேந்திரநாத் மனமுடைந்து அவரது வீட்டு மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக்கண்ட அவரது தாயார் அதிர்ச்சியடைந்து பரதராமி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறிய குடும்ப தகராறினால் திருமணமான மூன்றே மாதத்தில் ராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஆசிரியர்கள் முகக் கவசம் அணிய உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.