ETV Bharat / state

கருவாடு மீன் ஆகாது! - திமுகவை தாக்கும் அமைச்சர் கே.சி. வீரமணி - கே.சி.வீரமணி

வேலூர்: ஆம்பூரில் நடைபெற்ற புதிய நீதிக்கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி கறந்த பால் மடி புகாது, காகித பூ மணக்காது, கருவாடு மீன் ஆகாது அதே போல் திமுக மறுபடியும் ஆட்சி அமைக்காது என கடுமையாக விமர்சித்துள்ளார்.

புதிய நீதிக் கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்
author img

By

Published : Mar 15, 2019, 2:28 PM IST

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த புதிய நீதிக்கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் கே.சி. வீரமணி “கறந்த பால் மடிபுகாது, காகித பூ மணக்காது, கருவாடு மீன் ஆகாது” அதே போல் திமுக மறுபடியும் ஆட்சி அமைக்காது எனத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பேசிய ஏ.சி.சண்முகம், 20 ஆண்டு காலமாகத் தாய் வீட்டிலிருந்து தனிக் குடித்தனம் இருந்த நான், மறுபடியும் தாய் வீட்டிற்கு வந்துள்ளேன். வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் நான் வெற்றி பெற்றால், தனக்குச் சொந்தமான உலகத் தரம் வாய்ந்த பெங்களூரில் இயங்கி வரும் ராஜ ராஜேஸ்வரி மருத்துவமனையில் இலவச மருத்துவம் அளிக்கப்படும் என உறுதியளித்தார்.

மேலும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவர்களை அனைவரும் எழுந்து நடக்க முடியாது எனக் கூறுகின்றனர்.ஆனால் வேலூரில் அவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார் எனத் தெரிவித்தார். ஏற்கனவே எனக்கு எதிராக ஆரணி தொகுதியில் திமுக போட்டியிட்டபோது அவர்களை விட 75,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளேன், இருந்தும் எந்த தைரியத்தில் மறுபடியும் திமுக போட்டியிடுகிறது என்று தெரியவில்லை எனப் பேசினார். இக்கூட்டத்தில் பாஜக, பாமக, அதிமுக கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

Intro:ஆம்பூரில் நடைப்பெற்ற புதிய நீதிக்கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய கே.சி.வீரமணி கறந்த பால் மடி புகாது, காகித பூ மணக்காது, கருவாடு மீன் ஆகாது அதே போல் திமுக மறுபடியும் ஆட்சி அமைக்காது என பேச்சு.

Body:வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த புதிய நீதிகட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைப்பெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர்
கே.சி. வீரமணி.
கறந்த பால் மடிபுகாது, காகித பூ மனக்காது, கருவாடு மீன் ஆகாது, அதே போல் திமுக மறுபடியும் ஆட்சி அமைக்காது என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பேசிய ஏ.சி.சண்முகம்.

20 ஆண்டு காலமாக தாய் வீட்டிலிருந்து தனி குடித்தனம் இருந்த நான் மறுபடியும் தாய் வீட்டிற்கு வந்துள்ளேன்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நான் வெற்றி பெற்றால், தனக்கு சொந்தமான உலக தரம் வாய்ந்த பெங்களூரில் இயங்கி வரும் ராஜராஜேஸ்வரி மருவத்துவமனையில் இலவச மருத்துவம் அளிக்கப்படும் என உறுதியளித்தார்.

மேலும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவர்களை அனைவரும் எழுந்து நாடக்க முடியாது என கூறுகின்றனர், ஆனால் வேலூரில் அவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார், என தெரிவித்தார்.

ஏற்கனவே எனக்கு எதிராக ஆரணி தொகுதியில் திமுக போட்டியிட்டபோது அவர்களை விட 75000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளேன், இருந்தும் எந்த தைரியத்தில் மறுபடியும் திமுக போட்டியிடுகிறது என தெரியவில்லை என பேசினார்.

Conclusion:இக்கூட்டத்தில் பாஜக, பாமக மற்றும் அதிமுக கூட்டணி கட்சி உறுப்பினர்கள் பலர் பங்கேற்னர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.