ETV Bharat / state

தனியார் காலணி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - undefined

வேலூர்: ஆம்பூரில் இயங்கி வரும் தனியார் காலணி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட காலணி உதிரி பாகங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தது.

ஆம்பூர் தீ விபத்து
author img

By

Published : Mar 28, 2019, 10:21 PM IST

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள சின்னவரிகம் பகுதியில் (ஆம்பூர் ஹூஸ்) என்ற தனியார் காலணி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையின் பின்புறத்தில் காலணிகளுக்கு தேவையான உதிரி பொருட்கள் சேமித்து வைக்கும் கிடங்கு ஒன்று உள்ளது. இக்கிடங்கில் சுமார் 5:30 மணியளவில் புகை மூட்டம் வருவதைக் கண்டு சந்தேகமடைந்த காவலாளிகள் விரைந்து சென்று பார்த்த போது சேமிப்பு கிடங்கில் தீ பற்றி இருப்பது தெரியவந்தது.

இதனால் பீதியடைந்த காவலாளிகள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். ஆனால், அதற்குள் தீ மளமளவென கிடங்கு முழுவதும் பரவியது.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் இரண்டரை மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 லட்சம் மதிப்பிலான உதிரி பாகங்கள் எரிந்து சாம்பலானதாக தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தொழிற்சாலையில் பணியாளர்கள் வேலை முடிந்து சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இவ்விபத்து மின்கசிவினால் ஏற்பட்ட விபத்தா அல்லது யாரேனும் தீ வைத்தார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro: ஆம்பூரில் இயங்கி வரும் தனியார் காலணி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட காலணி உதிரி பாகங்கள் தீயில் எரிந்து சேதம்.

Body: வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் பகுதியில் (ஆம்பூர் ஷூஸ்) என்ற தனியார் காலணி தொழிற்சாலை இயங்கிவருகிறது, இத்தொழிற்சாலையின் பின்புறம் காலணிகளுக்கு தேவையான உதிரி பொருட்கள் சேமித்து வைக்கும் கிடங்கு ஒன்று உள்ளது.

இக்கிடங்கில் சுமார் 5:30மணியளவில் திடீரென புகை மூட்டம் காணப்பட்டது.

அங்கு வேலை பார்க்கும் காவளிகள் விரைந்து சென்று பார்த்த போது சேமிப்பு கிடங்கில் உள்ள கேன்களில் தீ பற்றி இருப்பது தெரியவந்துள்ளது, உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் அதற்குள் தீ மளமளவென கிடங்குகள் முழுவதும் பரவியது.

உடனடியாக விரைந்த தீயணைப்பு துறையினர் கிடங்கில் அதிக அளவு ரசாயணங்கள் இருந்ததால் தீயை அணைக்க பெரும்பாடுபட்டனர், சுமார் 2:30 மணி நேர போரத்திற்கு பிறகு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் கொண்டு தீயை அணைத்தனர்.

சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த உதிரி பாகங்களின் மொத்த மதிப்பு 50 லட்சம் என தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்தது.

Conclusion: மேலும் தொழிற்சாலையில் பணியாளர்கள் வேலை முடிந்து சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இவ்விபத்து மின்கசிவினால் ஏற்பட்ட விபத்தா அல்லது யவரேனும் தீ வைத்தார்களா என்ற கோணங்களில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.