திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் பத்தாம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்துவிட்டு, திருப்பூரில் உள்ள தனியார் பஞ்சாலையில் வேலை செய்து வருகிறார்.
அதே ஆலையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியம் மகன் லெனின் (24) என்பவரும் ஓட்டுநராக வேலை செய்துவருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி இளைஞர் அழைத்து சென்றுள்ளார்.
உடனே சிறுமியின் பெற்றோர் வையம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறுமி, லெனின் ஆகியோரை தேடி வந்தனர்.
காவல் துறையினர் தேடுவதை அறிந்த லெனின், சிறுமியை மட்டும் அவரது வீட்டில் விட்டுவிட்டு தலைமறைவாகினார்.
இந்நிலையில் வையம்பட்டி காவல் துறையினர் லெனினை கைது செய்து அனைத்து மகளிர் காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர்.
அதனைத் தொடந்து போக்சோவில் கைது செய்த காவல் ஆய்வாளர் இளைஞரை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.
இதையும் படிங்க: மகளை பாலியல் வன்புணர்வு செய்தவர் கைது