ETV Bharat / state

காவல் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி! - zoom app

திருச்சி: ஊரடங்கின் காரணமாக வீட்டிலேயே முடங்கி இருக்கும் மாணவர்களை மனதளவில் பக்குவப்படுத்தும் வகையில், காவல் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு காணொலி காட்சி மூலம் பேச்சுப் போட்டி நடத்தப்படுகிறது.

திருச்சி காவல் துணைத் துலைவர் பாலகிருஷ்ணன்

author img

By

Published : May 14, 2020, 10:26 AM IST

கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் 17ஆம் தேதிமுதல் முடிவடையவுள்ளது. ஊரடங்கு நான்காவது முறையாக நீட்டிப்பது குறித்த அறிப்பு மே 18 ஆம் வெளியாகும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

ஊரடங்கின் காரணமாக வீட்டிலேயே முடங்கி இருக்கும் மாணவர்களை மனதளவில் பக்குவப்படுத்தும் வகையிலும்,அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையிலும் திருச்சி சரக காவல் துறைக்கு உள்பட்ட திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடத்த திருச்சி காவல் துணைத் துலைவர் பாலகிருஷ்ணன் ஏற்பாடு செய்துள்ளார். இந்த போட்டி மே 16ஆம் தேதி காணொலி காட்சி மூலம் (zoom cloud app) திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள காவல் துணைத் தலைவர் அலுவலகத்தில் இருந்து நடத்தப்படுகிறது.

இந்தப் போட்டி 6 முதல் 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பிற்கு மேல் என இரண்டு பிரிவாக நடத்தப்படுகிறது. தமிழ் அல்லது ஆங்கிலம் மொழிகளில் ஐந்து நிமிடம் மட்டுமே பேச அனுமதிக்கப்படுவார்கள். முதலில் , உட்கோட்ட அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு, இறுதி போட்டி நடத்தப்படும். அதில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.ஆயிரம் , நான்காம் பரிசாக ரூ. 500 என்ற வகையில் பரிசுகள் வழங்கப்படும். மேலும், இதில் பங்கு பெறும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு தங்களது பெயரை பதிவு செய்துக்கொள்ளலாம். திருச்சி – 0431 2333638, புதுக்கோட்டை – 04322 266966, கரூா் – 04324 255100, பெரம்பலூர் – 04328 224962, அரியலூர் – 04329 222216 வரும் 15-ம் தேதி மதியம் 2 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் பார்க்க: ஊரடங்கு முடிந்த பிறகு தொழிற்சாலைகள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள்- தமிழக அரசு ஆணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.