திருச்சி மாவட்டத்திலுள்ள தென்னூர் சுப்பையா நடுநிலைப்பள்ளியிலுள்ள குழந்தைகளின் உணவில் ஊட்டச்சத்துக் குறைபாடுகளைத் தீர்க்கும் வகையில், ’அட்சய பாத்திரம்’ என்ற திட்டம் நேற்று தொடங்கப்பட்டது .
இந்தத் திட்டத்தின் நோக்கமானது பள்ளி மாணவ, மாணவிகள் வீட்டிலிருந்து கொண்டுவரும் காய்கறிகளை மதிய சத்துணவுடன் சேர்த்து அவர்களுக்கு சமைத்து தரப்படும். இதன் மூலம் வீட்டில் காய்கறிகளை தவிர்த்துவரும் மாணவர்களுக்குப் பள்ளியில் ஆசிரியரின் உதவியுடன் ஊட்டச்சத்து நிறைந்த உணவைக் கொடுக்க முடியும் எனத் திட்ட செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த அட்சய பாத்திர திட்டத்தின் மூலம் ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாத மாணவர்களாக உருவாக்க முடியும் எனவும் இந்தத் திட்டம் சென்னைக்கு அடுத்தப்படியாக தற்போது திருச்சியில் தொடங்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: 50 முட்டைகளில் 50 இந்தியத் தலைவர்களின் முகங்கள் - சாதனை படைத்த கல்லூரி மாணவி