ETV Bharat / state

தொடங்கியது பொது வேலைநிறுத்தப் போராட்டம்: அவதியில் மக்கள் - பெட்ரோல் விலை கண்டித்து போராட்டம்

மத்திய அரசைக் கண்டித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் நடத்தும் இரண்டு நாள் பொது வேலைநிறுத்தம் தொடங்கியதால், போக்குவரத்து இன்றி பொதுமக்கள் அவதியிலுள்ளனர்.

Bharat banth  trade unions Bharat banth  trade unions Bharat banth starts  General strike  bus strike  strike against hike on petrol rate  பொது வேலைநிறுத்தம்  வேலைநிறுத்தப் போராட்டம்  தொடங்கியது பொது வேலைநிறுத்தப் போராட்டம்  பொது வேலைநிறுத்தப் போராட்டம்  பெட்ரோல் விலை கண்டித்து போராட்டம்  கேஸ் விலை கண்டித்து போராட்டம்
வேலைநிறுத்தப் போராட்டம்
author img

By

Published : Mar 28, 2022, 12:17 PM IST

Updated : Mar 28, 2022, 3:45 PM IST

திருச்சி: பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய தொழிற்சங்கங்கள் மார்ச் 28,29 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இந்நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் பேருந்து சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில், திருச்சியில் இன்று (மார்ச் 28) காலை முதல் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதியில் உள்ளனர். மேலும் தனியார் பேருந்து மட்டும் இயங்கி வருவதால், பேருந்தில் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதனைக்காரணம் காட்டி, வெளி மாநிலங்களுக்கு செல்லக்கூடிய தனியார் பேருந்துகள் அதிக அளவு கட்டணம் வசூலிப்பதாக பேருந்து பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்லும் மக்கள், ஆட்டோ மற்றும் வாடகை கார் மூலம் செல்லக் கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள நான்கு அரசு போக்குவரத்து பணிமனைகளில் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் புறநகரில் 18 இடங்களிலும், மாநகரில் ஒரு இடங்களும் என மொத்தம் 19 இடங்களில் இன்று (மார்ச் 28) மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. தற்போது நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருவதால், முக்கியமான இடங்களில், அதிக அளவில் காவல் துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் ஆங்காங்கே தீயணைப்பு வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: மத்திய அரசை கண்டித்து போக்குவரத்து சங்கத்தினர் வேலை நிறுத்தம்... பயணிகள் அவதி...

Last Updated : Mar 28, 2022, 3:45 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.