தமிழ்நாட்டில் வனப்பரப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் கன்னியாகுமரியும் ஒன்று. மேற்கு தொடர்ச்சி மலையை ஆதாரமாகக் கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை முதல் ஆரல்வாய்மொழி வரை மாவட்டம் முழுவதும் ஒரு புறம் மலையும் மலை சார்ந்த காடுகளும் உள்ளன.
இதில் ஏராளமான அரியவகை மரங்கள் இயற்கையாக வளர்ந்துள்ளன. சமூக விரோதிகள் அடிக்கடி காட்டு பகுதிக்குள் நுழைந்து மரங்களை வெட்டி கடத்துவது சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது.
அந்த வகையில் நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி மலைக் காட்டுப் பகுதிகளில் தேக்கு மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து அழகிய பாண்டியபுரம் வனத்துறையினர் காட்டுப்பகுதியில் தேக்கு மரங்களை வெட்டி கடத்த தயாராக இருந்த 6 டன் தேக்குமரம் டெம்போ வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஈசாந்திமங்கலம் ஆல்வின் தெள்ளாந்தியை சேர்ந்த கிருஷ்ணராஜ், திட்டுவிளை சேர்ந்த ராஜன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.
இதையும் படிங்க : மார்பக புற்றுநோய்: ஆரம்ப நிலையில் கண்டறியும் “ஈஸிசெக் பிரெஸ்ட்” அறிமுகம்