ETV Bharat / state

திருவிழாவில் சமூகப் பாகுபாடு: அம்மன் வீதி உலா வராததால் மக்கள் கவலை!

திருச்சி: பாகுபாடு காரணமாக தங்களது பகுதியில் அம்மன் வீதிஉலா வரவில்லை என பட்டியலின மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அம்மன் வீதி உலா வராததால் மக்கள் கவலை
அம்மன் வீதி உலா வராததால் மக்கள் கவலை
author img

By

Published : Mar 13, 2020, 3:06 PM IST

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கீழ அன்பில் கிராமத்தில் ஆச்சிராமவள்ளி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில், கீழ அன்பில், கோட்டைமேடு, ஜெங்கமநாதபுரம், மங்கம்மாள்புரம், குறிச்சி, படுகை, பராமங்கலம் ஆகிய ஏழு கிராமங்களுக்குச் சொந்தமாகும்.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அப்போது அம்மன் வீதி உலா, கிடா வெட்டு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். அந்த வகையில் கடைசியாக இந்த திருவிழா 1993ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது பட்டியலினத்தோர் வசிக்கும் பகுதிக்குள் அம்மன் வீதி உலா செல்ல எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக திருவிழா நிறுத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, சமீபத்தில் தீர்ப்பு வெளியானது. பழைய முறைப்படியே திருவிழா நடைபெறவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பைத் தொடர்ந்து 27 ஆண்டுகள் கழித்து தற்போது திருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது.

இதற்காக வருவாய் துறை அலுவலர்கள் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் பட்டியலினத்தோர் வசிக்கும் பகுதிக்குள் அம்மனை அழைத்துச் செல்லாமல் பொது இடத்தில் வைத்து அனைவரும் வழிபடுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில் திருவிழா தொடங்கி நடைபெற்றது.

ஆனால், பொது இடத்தில் வைத்து வழிபாடு நடத்த பட்டியலினத்தோர் மறுப்பு தெரிவித்தனர். அனைத்து கிராமங்களுக்கும் அம்மன் செல்வதுபோல தங்களது பகுதிக்கும் அம்மன் வீதிஉலா வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக காவல் துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் காவல் துறையினரின் பலத்த பாதுகாப்பால், அம்மன் வீதிஉலா, பட்டியலினத்தோர் வசிக்கும் பகுதிக்குள் வரவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறை அலுவலர்கள், காவல் துறையினர் பொது மக்களை சமாதானப்படுத்தினர்.

அம்மன் வீதி உலா வராததால் மக்கள் கவலை

அனைத்துப் பகுதிகளுக்கும் செல்லும் அம்மன் வீதிஉலா, பாகுபாடு காரணமாக தங்களது பகுதிக்கு பட்டும் வரவில்லை என்பது மிகவும் வேதனையாக உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்த மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.