ETV Bharat / state

பசியில் வாடும் ஆதரவற்ற முதியவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் 'மக்கள் நண்பன்'

திருச்சி: ஊரடங்கு காரணமாக வீடுகளில் முடங்கிய ஆதரவற்ற முதியோருக்கு காவல் துறையினர் உணவு, முகக்கவசங்களை வழங்கினர்.

பசியில் வாடும் ஆதரவற்ற முதியவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் காவல்துறை!

author img

By

Published : May 1, 2020, 4:44 PM IST

நாங்கள் கடுமையானவர்கள் மட்டுமல்ல, பசியில் இருப்போரைத் தேடி உணவளிக்கும் மென்மையானவர்களும்கூட என நிருபித்திருக்கிறார்கள், திருவெறும்பூர் காவல் துறையினர். கரோனா ஊரடங்கால் வீடுகளில் உணவின்றி தவித்துவந்த முதியவர்களை அடையாளம் கண்டு, வேங்கூர் கிராமத்தில் காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி தலைமையில் முதியோர்களுக்கு உணவும், முகக்கவசமும் வழங்கப்பட்டன.

ஊரடங்கில் உதவும் காவல்துறை

ஊடரங்கில் கவனிக்க ஆளில்லாமல், தனித்துவிடப்பட்ட முதியோர்களுக்கு உதவ, காவல் துறை சார்பில் தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் காவல் துறையினரே நேரடியாகச் சென்று உதவிகளைச் செய்து வருகின்றனர். அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர், மணப்பாறை, ஜீயபுரம், முசிறி, லால்குடி, மணப்பாறை ஆகிய ஐந்து காவல் சரகங்களுக்குட்பட்ட 36 காவல் நிலையங்களில், அந்தந்த காவல் சரக டிஎஸ்பி தலைமையில் காவல் நிலையங்கள் வாரியாக உதவ முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து, கிராமப் பஞ்சாயத்து தலைவர்கள் மூலம் முதியவர்கள், ஆதரவற்றவர்கள் கணக்கெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு நாள்தோறும் மூன்று வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது. சமையல் செய்ய தேவையான அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறிகள் போன்றவற்றையும் காவல் துறையினர் நேரடியாகச் சென்று வழங்கி வருகின்றனர். திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய ஐந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

பசியில் வாடும் ஆதரவற்ற முதியவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் காவல்துறை!

திருச்சி மாவட்டத்தில், 122 முதியவர்கள் தனிமையில் வசித்துவருவதை அறிந்து, அவர்களின் பசியைப் போக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, வேங்கூர் கிராமத்தில் 32 ஆதரவற்ற முதியோருக்கு, காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி தலைமையில், வீடு வீடாக உணவும், முகக்கவசமும் வழங்கப்பட்டன. இவர்களுக்கு, நன்கொடையாளர்கள் மூலம் உணவு பெறப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தக் கிராமத்தில் கரோனா விழிப்புணர்வு முகாமும் நடத்தப்படுகிறது.

இது குறித்து வேங்கூர் ஊராட்சி மன்றத் தலைவர் மதியழகன் கூறுகையில், ”காவல் துறை சார்பில் எங்களது கிராமத்தில் வசிக்கும் 32 ஆதரவற்ற முதியவர்களுக்கு மூன்று வேளை உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்காக, அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், எங்கள் கிராமத்தில் வசிக்கும் திருநங்கைகளுக்கும், அவர்கள் உணவு வழங்கி வருகின்றனர். இது மிகவும் உதவியாக இருக்கிறது” என்றார்.

இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்களா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.