ETV Bharat / state

அரிட்டாபட்டி விவசாயிகள் முதலமைச்சருடன் சந்திப்பு...மு.க.ஸ்டாலினுக்கு நாளை பாராட்டு விழா! - ARITTAPATTI FARMERS MEET CM

அரிட்டாபட்டி சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக அந்த பகுதி விவசாயிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தின் இன்று சந்தித்தனர்.

அரிட்டாபட்டி சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
அரிட்டாபட்டி சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு (Image credits-TN DIPR)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2025, 4:56 PM IST

சென்னை: அரிட்டாபட்டி சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக அந்த பகுதி விவசாயிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தின் இன்று சந்தித்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் நாயக்கர்பட்டியை மையமாகக் கொண்டு மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். டங்ஸ்டன் திட்டத்துக்கு அரிட்டாபட்டி சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள சுமார் 5,000 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என தகவல் வெளியானது. இதனால், அதிருப்தியடைந்த மேலூரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள், பெண்கள், கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஜனவரி 7ஆம் தேதி நடைபெற்ற பிரமாண்ட போராட்டத்தில் மேலூர் மற்றும் நரசிங்கம்பட்டி ஆகிய பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

சட்டப்பேரவையில் தீர்மானம்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் டிசம்பர் 9-ம் தேதி தமிழக அரசு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்திற்கு எதிராக தீர்மானம் இயற்றியது. அப்போது கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நான் முதலமைச்சராக இருக்கும் வரை நிச்சயமாக டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்க மாட்டேன் என கூறினார்.

டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக மக்களின் பிரமாண்ட போராட்டம்
டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக மக்களின் பிரமாண்ட போராட்டம் (Image credits-ETV Bharat Tamil Nadu)

எனினும் கூட மத்திய அரசு இந்த திட்டத்தை ரத்து செய்யாமல் அரிட்டாபட்டி பல்லுயிர் சூழல் தளத்திற்கு உட்பட்ட 500 ஏக்கர் நிலத்தை தவிர மீதமுள்ள 4 ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தில் சுரங்கம் அமைக்கப்படுவதற்கு இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் மறுவரையறை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. எனவே பொதுமக்களின் போராட்டம் தீவிரம் அடைந்தது. இந்நிலையில் மேலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அடங்கிய குழுவினர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் டெல்லி சென்றனர். டெல்லியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து டங்ஸ்டன் கனிம சுரங்க ஏல அறிவிப்பை ரத்து செய்யும்படி கோரிக்கை விடுத்தனர்.

சுரங்க ஏலம் ரத்து: டங்ஸ்டன் கனிம சுரங்கத்தால் மேலூர் வட்டத்தில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளையும், விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், நிலத்தடி நீர் சீர்கேட்டையும் விளக்கி கூறினர். இந்நிலையில், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, நாயக்கர் பட்டி தொகுதிக்கு உட்பட்ட ஐந்தாயிரம் ஏக்கர் நிலங்கள் அடங்கிய டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பை ரத்து செய்வதாக அறிவித்தார். இதனை தமிழ்நாடு அரசு வரவேற்றது.

முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்

இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அரிட்டாபட்டி, அ.வல்லாளப்பட்டி , கிடாரிப்பட்டி , நரசிங்கம்பட்டி , நாயக்கர்பட்டி , செட்டியார்பட்டி , தெற்குதெரு ,மீனாட்சிபுரம், மாங்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் இன்று சந்தித்துப் பேசினர்.

அப்போது அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல உரிமையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு அத்திட்டம் ரத்து செய்யப்பட காரணமாக இருந்தமைக்காக முதலமைச்சருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். அப்போது நாளை அரிட்டாபட்டியில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்த உள்ளதாகவும் அதற்கு வருகை தரும்படியும் பொதுமக்கள் அழைப்பு விடுத்தனர். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "உங்கள் அன்பை ஏற்க நாளை அரிட்டாபட்டி-க்கு வருகிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.