ETV Bharat / state

மணப்பாறை காவல்நிலையம் முற்றுகை! - trichy district news

மகளை காணவில்லை என கொடுக்கப்பட்ட புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி மணப்பாறை காவல்நிலையத்தை பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

people staged protest infront of manaparai police station
மாணப்பாறை காவல்நிலையம் முற்றுகை!
author img

By

Published : Jul 4, 2021, 6:59 AM IST

திருச்சி: மணப்பாறை அடுத்த சமுத்திரம் காந்திநகர் பகுதியில் வசித்துவரும் ஆறுமுகம்- அமுதவள்ளி தம்பதியினரின் மகள் வளர்மதி(19). இவர், திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். வீட்டிலிருந்து படித்து வந்த வளர்மதி, கடந்த வெள்ளிக்கிழமை(ஜூலை 2) இரவு வீட்டில் இருந்தநிலையில் காணவில்லை.

அக்கம்பக்கத்தில், தேடி பார்த்தும் கிடைக்காத நிலையில், வளர்மதியில் செல்போன் பதிவுகளை வைத்து தனது மகளை ஸ்ரீரங்கம் வட்டம் இனாம்மாத்தூரைச் சேர்ந்த கமலக்கண்ணன் மகன் மதியழகன்(21) கடத்திச் சென்றிருக்கலாம் என மணப்பாறை காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். ஆனால், அப்போது பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ராபர்ட் முதலில் புகாரை வாங்க மறுத்து, பின்பு நேற்று மாலை வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த பெண்ணின் பெற்றோர், மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியினருடன் இணைந்து மணப்பாறை காவல் நிலையத்தை நேற்று மாலை முற்றுகையிட்டனர்.

இதனையடுத்து அங்கு விரைந்த மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆர். பிருந்தா, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், வளர்மதி தான் விரும்பிய நபரை திருமணம் செய்து ராம்ஜிநகர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும், திருமண வயதை எட்டிய பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக அவரை இங்கு அழைத்துவர சட்டத்தில் இடமில்லை எனவும் கூறினார்.

இருப்பினும், பெற்றோருக்கு முடிந்த உதவிகளை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: 'அன்பில் மகேஷ் நிகழ்ச்சியை புறக்கணிக்கும் திமுக' - கே.என்.நேருவுடனான பனிப்போர்தான் காரணமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.