கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டித்துள்ள நிலையில், பலதரப்பட்ட மக்களும் அத்தியாவசிய பொருள்களுக்காக அரசை எதிர்பார்த்துவருகின்றனர்,
இந்நிலையில், திருச்சி மாவட்டம் உறையூரிலுள்ள வாத்துக்காரத் தெருவில் காங்கிரஸ் எம்.பி. திருநாவுகரசர் சார்பாக, காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவு துணைத் தலைவர் தலைமையில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் இருநூறு பேருக்கு டோக்கன் முறையில் பொருள்கள் விநியோகம் செய்யப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் பலரும் விரைவில் தங்களுக்கான நிவாரணப் பொருள்களைப் பெற தேவாலயத்தின் முன்பு தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் ஒருவரை ஒருவர் நெருக்கிக்கொண்டு கூட்டமாக நின்றுள்ளனர். இதனால் நோய் பரவும் அபாயம் அதிகளவில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டினர்.
அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் நிவாரணப் பொருள்களை மாநகராட்சி அலுவலர்களின் முன்னிலையில்தான் வழங்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபோதும், இதனை மதிக்காமல் காங்கிரஸ் கட்சியினர் நிவாரணப் பொருள்கள் வழங்கியது அனைவரிடத்திலும் பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க:அமைச்சரின் நிகழ்ச்சியில் தகுந்த இடைவெளியை கடைபிடித்த காலணிகள்!