ETV Bharat / state

முதலமைச்சரை சந்திக்க பாரிவேந்தர் திடீர் முடிவு! - எம்பி பாரிவேந்தர் செய்தியாளர்கள் சந்திப்பு

திருச்சி: தொகுதி நலனுக்காக தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்க முடிவு செய்துள்ளேன் என்று பாரிவேந்தர் தெரிவித்தார்.

parivendar
parivendar
author img

By

Published : Jan 10, 2020, 4:35 PM IST

இந்திய ஜனநாயக மக்கள் கட்சி நிறுவனரும், எம்.பியுமான பாரிவேந்தர் சார்பில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளிகளுக்கு 100 கணினிகள் வழங்கும் விழா திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களிடம் பாரிவேந்தர் கணினிகளை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாரிவேந்தர், "கடந்த ஆறு மாதங்களில் மத்திய அமைச்சர்களை சந்தித்து தொகுதிக்கு வேண்டிய பல்வேறு திட்டங்களை பெற முயற்சி செய்துள்ளேன். முதல்கட்டமாக 2.5 கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் அரசுப் பள்ளி வகுப்பறைகள், குடிநீர் தொட்டிகள், சுற்றுச்சுவர், கழிப்பிடம் ஆகியவற்றிற்கு செலவிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்களது அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோன்று, அரியலூர்- பெரம்பலூர், துறையூர்-நாமக்கல் ஆகிய வழித்தடங்களை இணைக்கும் ரயில்வே பாதை அமைக்கக் பெரம்பலூர் மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். அடுத்த நிதியாண்டில் இத்திட்டத்தை செய்துதருவதாக ரயில்வே அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாரிவேந்தர்

மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசுகள் மூலமும் பல்வேறு திட்டங்கள் பெரம்பலூர் தொகுதியில் செயல்படுத்த வேண்டியுள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் முதலமைச்சரை சந்திக்க முடிவு செய்துள்ளேன். நிச்சயம் திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

Intro:தொகுதியில் நலனுக்காக தமிழக முதலமைச்சரை சந்திக்க முடிவு செய்துள்ளேன் என்று பாரிவேந்தர் கூறினார்.Body:திருச்சி:
தொகுதி நலனுக்காக தமிழக முதலமைச்சரை சந்திக்க முடிவு செய்துள்ளேன் என்று பாரிவேந்தர் கூறினார்.
இந்திய ஜனநாயக மக்கள் கட்சி நிறுவனர் எம்பி பாரிவேந்தர் சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளிகளுக்கு 100 கணினி வழங்கும் விழா திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் பாரிவேந்தர் கணினிகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
கடந்த 6 மாதங்களில் மத்திய அமைச்சர்களை சந்தித்து தொகுதிக்கு வேண்டிய பல்வேறு திட்டங்களை பெற முயற்சி செய்துள்ளேன். இந்த முயற்சியின் காரணமாக திட்டங்கள் உடனடியாகவும் கிடைக்கலாம், அல்லது அடுத்த ஒரு வருடத்தில் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. முதல்கட்டமாக எனது 2.5 கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் அரசுப் பள்ளி வகுப்பறைகள், குடிநீர் தொட்டிகள், சுற்றுச்சுவர், கழிப்பிடம் போன்றவற்றுக்கு செலவிடப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்களது அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் அரியலூர்- பெரம்பலூர்-துறையூர்-நாமக்கல் ஆகிய வழித்தடங்களை இணைக்கும் ரயில்வே பாதை அமைக்க வேண்டும் என்று பெரம்பலூர் மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக ரயில்வே அமைச்சரை சந்தித்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் இத்திட்டத்தை செய்து தருவதாக ரயில்வே அமைச்சர் உறுதி அளித்துள்ளார். காவிரி உபரி நீரை பயன்படுத்தும் வகையில் காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளேன். அதேபோல் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை பாதுகாக்கும் வகையில் பகுதியில் உள்ள 6 மாவட்டங்களுக்கு தலா ஒரு குளிர்சாதன கிடங்கு அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசுகள் மூலமும் பல்வேறு திட்டங்கள் பெரம்பலூர் தொகுதியில் செயல்படுத்த வேண்டியுள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் முதலமைச்சரை சந்திக்க முடிவு செய்துள்ளேன். இதற்கான ஏற்பாடுகள் விரைவில் தொடங்கும். நிச்சயம் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ரயில்வே மேம்பால திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் மற்றும் ஏரி ஆழப்படுத்துதல், ஜவுளி பூங்கா, உணவு பூங்கா போன்ற திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சரிடம் வலியுறுத்தப்படும் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.