பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் பாரிவேந்தர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாநில தலைவர் சத்தியநாதன், இந்திய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் ஜெயசீலன், பார்க்கவகுல முன்னேற்ற சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாரிவேந்தர் கூறுகையில், "வேளாண் கடன் தள்ளுபடிக்கு காரணமாக இருந்தது ஸ்டாலின்தான், அதற்காக அவருக்கு என் நன்றி" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'ஸ்டாலினுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு' - துர்கா ஸ்டாலின்