திருச்சி தனியார் மருத்துவமனை சார்பில் இதயத்திற்காக ஓடுவோம் என்ற தலைப்பில் மாராத்தான் ஓட்டத்திற்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 5 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் என இரு பிரிவுகளாக இந்த மாராத்தான் ஓட்டம் நடைபெற்றது.
கொடியசைத்து ஓட்டம் தொடங்கியதும் பின்னால் இருந்தவர்கள் முந்திடியடித்துக் கொண்டு ஓட முயன்றனர். அப்போது முன் வரிசையில் நின்று கொண்டிருந்த சிறுவர், சிறுமியர்கள் பெரியவர்களுடன் ஈடு கொடுத்து ஓட முடியாமல் திணறினர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது 10க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் தடுமாறி கீழே விழுந்தனர்.
உடனடியாக அங்கிருந்த தன்னார்வலர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தின் மத்தியில் புகுந்து கீழே விழுந்த சிறுவர்களை மீட்டனர். உடனடியாக மாராத்தான் ஓட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கீழே விழுந்த சிறுவர் சிறுமியர் தொடர்ந்து ஓடத் தொடங்கிய பின்னரே மாராத்தான் ஓட்டம் தொடர்ந்து நடந்தது. மேலும், இதில் வெற்றி பெற்றவர்களுக்கு அண்ணா விளையாட்டு அரங்கில் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க:
ஊட்டச்சத்து மாத விழா - தூத்துக்குடியில் மினி மாரத்தான் போட்டி