ETV Bharat / state

வேப்பிலை மாரியம்மன் திருவிழா - மணப்பாறையில் கோலாகலம்!

திருச்சி: மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான நேற்று, குதிரை வாகனத்தில் எழுந்தருளிய அம்மனை மக்கள் தரிசனம் செய்தனர்.

temple
author img

By

Published : May 14, 2019, 3:23 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு வேப்பிலை மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் சித்திரைத் திருவிழா பிரசித்திப்பெற்ற ஒன்றாகும். இந்நிலையில் இந்த வருடத்திற்கான சித்திரைத் திருவிழா கடந்த மாதம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் சிறப்பான முறையில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது முக்கிய நிகழ்ச்சியான அம்மனின் வேடபரி நிகழ்ச்சி நேற்று காட்டு முனியப்பன் கோயிலில் இருந்து தொடங்கி மாரியம்மன் கோயிலை வந்தடைந்தது.

இதைத் தொடர்ந்து மாரியம்மன் கோயிலில் இருந்து ராஜ வீதிகள் வழியாக குதிரை வாகனத்தில் வீதி உலா வந்த அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் குலவையிட்டும், கொலுக்கட்டைகளை அம்மன் மீது வீசியும் ஆரவாரம் செய்தனர்.

வேப்பிலை அம்மன் திருவிழா

இதனையடுத்து அம்மனுக்கு முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் பொதுமக்கள் முளைப்பாரிகளை கோயிலுக்கு எடுத்து வந்தனர். இதில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வேடபரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அம்மனின் அருள் பெற்றுச் சென்றனர்.

Intro:குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா - மழையையும் பொருட்படுத்தாத மக்கள் வெள்ளம்.Body:திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு வேப்பிலை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக் கோவிலின் சித்திரைத் திருவிழா பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இந்நிலையில் இந்த வருடத்திற்கான சித்திரை திருவிழா கடந்த மாதம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 25 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்ற திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்நிலையில் திருவிழாவின் இரண்டாவது முக்கிய நிகழ்ச்சியான அம்மனின் வேடபரி நிகழ்ச்சி நேற்று காட்டு முனியப்பன் கோவிலில் இருந்து தொடங்கி மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. இதன் பின்னர் மாரியம்மன் கோவிலில் இருந்து அம்மன் அலங்காரத்தோடு குதிரை வாகனத்தில் ராஜ வீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் குலவையிட்டும், கொழுக்கட்டைகளை அம்மன் மீது வீசியும் ஆரவாரம் செய்தனர். இதனையடுத்து அம்மனுக்கு முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து மேள தாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் பொதுமக்கள் முளைப்பாரிகளை கோயிலுக்கு எடுத்து வந்தனர். இதில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வேடபரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அம்மனின் அருள் பெற்றுச் சென்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.