ETV Bharat / state

யாசகம் செய்து பெற்ற பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு செலுத்திய பெரிய மனிதர்! - யாசகர் பூல்பாண்டி

ஒவ்வொரு நாளும் யாசகமாக பெற்ற பணத்தை சேமித்து, ரூ.10 ஆயிரத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் பூல்பாண்டி என்ற மனிதநேயமிக்க யாசகர் வழங்கினார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 6, 2023, 7:48 PM IST

Updated : Feb 6, 2023, 8:19 PM IST

யாசகம் செய்து பெற்ற பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு செலுத்திய பெரிய மனிதர்!

திருச்சி: தேர்தலின்போது அள்ளிவிடும் வாக்குறுதிகள் காற்றிலே பறந்துகொண்டு தான் இருக்கின்றன. அதே நேரத்தில், ஏழைகளின் வாழ்வு இன்னமும் மேம்பட்டதாகத் தெரியவில்லை. கோடிகளில் புரளும் பணக்கார அரசியல்வாதிகள் கூட மக்களுக்கு உதவ சிறிதளவே முயல்கின்றனர்.

இத்தகைய சூழ்நிலைகளின் நடுவே வாழும் நம்மிடையே நாள் முழுதும் பெற்ற யாசகத்தை தனக்கென ஒதுக்காமல் ஒருவர் அரசிடம் கரோனா பொது நிவாரண நிதியாக வழங்கினார் எனில் நம்பமுடிகிறாதா? ஆம். தான் பெறும் யாசகங்களை அரசு பள்ளி மாணவர்களுக்கும், கரோனா காலத்தின் தொடக்கத்திலிருந்து அரசின் பொது நிவாரண நிதிக்கும் வழங்கியுள்ளார், பூல்பாண்டி என்ற யாசகர்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர், பூல்பாண்டி. யாசகரான இவர் தான் யாசகம் பெறும் பணத்தை அரசுக்கும், இன்னப் பிற நலத்திட்ட உதவிகளுக்கும் அளித்து உதவி செய்து வருகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு முதல் அரசு பள்ளிகளுக்கு, தான் யாசகமாக பெற்ற பணத்தை நன்கொடையாக செலுத்தி வருகிறார். கரோனா காலத்தில் அரசின் கரோனா நிவாரண நிதிக்கு பண உதவி செய்ய யாசகம் பெற்று தந்துள்ளார்.

ரூ.10 ஆயிரம் நிவாரண நிதி: இதன் தொடர்ச்சியாக அவ்வப்போது, யாசகம் பெற்ற பணத்தையும் அரசின் நிவாரண நிதிக்கு செலுத்தி வந்துள்ளார். அந்த வகையில் இன்று (பிப்.6) திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பூல்பாண்டி, மாவட்ட ஆட்சியரை சந்தித்து ரூ.10 ஆயிரம் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.

ரூ.50.60 லட்சம் வழங்கிய யாசகர்: பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'இதுபோல் யாசகம் பெற்ற பணத்தை நல்ல காரியங்களுக்கு கொடுப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதில், எந்த கஷ்டமும் எனக்கு இல்லை. யாசகம் பெறும் பணத்தை அரசுப் பள்ளிகளுக்கு வழங்குவதையே நான் விரும்புகிறேன். அதன்படி இதுவரையில், 50 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை நான் வழங்கியுள்ளேன்.

காமராஜரை நினைத்துக்கொள்வேன்: மேலும் தனக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால் தான் கர்மவீரர் காமராஜரை நினைத்துக்கொள்வேன்’ எனத் தெரிவித்தார். காரணம், காமராஜர் பல கஷ்டங்களை அனுபவித்து நல்ல நிலைமைக்கு வந்தவர் என்றும்; எனவே, அவரைத் தான் நான் நினைத்துக் கொள்வதாகவும் கூறினார்.

சமூக சேவகர் விருது பெற்றவர்: முன்னதாக, இவர் மதுரையில் இருந்தபோது கடந்த 2020ஆம் ஆண்டில் இவர் தான் யாசகமாகப் பெற்ற பணங்களில் ரூ.10 ஆயிரம் விதம் ரூ.80,000 வரை வழங்கி இருந்தார் என்பதும், இவரின் இந்த சேவை மனப்பான்மையை பாராட்டும் விதமாக மதுரை மாவட்ட நிர்வாகம் இவருக்கு சமூக சேவகர் விருது வழங்கி கௌரவப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ‘துணிவு’ படத்தைப் பார்த்து வங்கி கொள்ளை முயற்சி - 19 வயது இளைஞர் கைது!

Last Updated : Feb 6, 2023, 8:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.