ETV Bharat / state

டீக்கடையிலிருந்து பெட்டிப் பெட்டியாக மதுபாட்டில்கள் பறிமுதல்

திருச்சி: தேநீர் கடையில் பதுக்கி விற்பனைச் செய்யப்பட்ட மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருச்சி டீக்கடையில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் பறிமுதல்

author img

By

Published : May 31, 2021, 7:20 PM IST

திருச்சி மாவட்டம், துறையூர் அருகேயுள்ள பச்சப்பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் (54). இவர் அப்பகுதியில் உள்ள சிவன் கோயில் அருகில் தேநீர் கடை நடத்திவருகிறார். தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் உள்பட எந்தக் கடைகளும் செயல்பட அனுமதி இல்லை.

இந்நிலையில் இவர் மதுபாட்டில்களை வாங்கி தனது தேநீர் கடையில் முறைகேடாக பதுக்கி வைத்துள்ளார். இதையடுத்து ஊரடங்கு காலத்தில் முருகேசனும், அவரது மருமகன் பாலசுப்ரமணியனும் சேர்ந்து மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். இந்த தகவலறிந்து அங்கு வந்த பயிற்சி துணைக் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையிலான தனிப்படைக் காவல்துறையினர் அதிரடியாகச் சோதனையிட்டனர்.

கடையிலிருந்து 989 குவார்ட்டர் பாட்டில்கள், 58 பீர் பாட்டில்கள், 11 ஆயிரத்து 750 ரூபாய் ரொக்கப் பணத்தையும் தனிப்படை காவல்துறையினர் கைப்பற்றினர். மேலும் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: சசிகலா எந்தச் சூழலிலும் அதிமுகவில் நுழைய முடியாது - கே.பி. முனுசாமி திட்டவட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.