சென்னை: தமிழில் உச்ச நடிகராக இருக்கும் 'தளபதி 69’ படத்துடன் தனது திரைப்பயணத்தை நிறைவு செய்து கொள்வதாக அறிவித்துள்ளார். அதன்பின் முழுநேரமாக அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். அதனால் 'தளபதி 69’ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 'தளபதி 69’ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பிரியாமணி, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ்ராஜ், நரேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
தற்போது இதில் டிஜே அருணாச்சலமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது தெரியவந்துள்ளது. சுயாதீன இசைக்கலைஞரான இவர் ’அசுரன்’ மற்றும் ’பத்து தல’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'தளபதி 69’ படத்தில் நடித்து வரும் மமிதா பைஜூ உடன் ஜோடியாக நடித்து வருவதாகவும் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார் டிஜே.
அஜித்தின் ’துணிவு’ திரைப்படத்திற்கு பிறகு ஹெச்.வினோத் இயக்கி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். கே.வி.என் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
#Thalapathy69 - Teejay confirms in a Recent Interview that he's part of the Film..🤝 He previously acted in Asuran & PathuThala..👍
— Laxmi Kanth (@iammoviebuff007) January 8, 2025
• " i will be paired with #MamithaBaiju in the film.. 👀 I was very happy when I was offered the project..✌️ It's #ThalapathyVijay sir's last… pic.twitter.com/600aGRqLwd
இதையும் படிங்க: "இளம் தலைமுறையினர் கற்றுக் கொள்ள வேண்டும்" - அனிருத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் கொடுத்த அட்வைஸ்!
மேலும் அந்த பேட்டியில் பேசிய டிஜே, ”இந்த வருடம் மீண்டும் ஒரு சுயாதீன இசை ஆல்பத்தை வெளியிட போகிறேன். நான் நடிக்க வந்தது விபத்து போலத்தான் நிகழ்ந்தது. முதலில் நடிப்புக்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்றே நினைத்தேன். ஒரு பாடலை உருவாக்கும்போது எப்படி வெவ்வேறு உணர்வுகளுக்குள் போய் வருகிறேனோ அப்படித்தான் நடிப்பும் என பின்பு புரிந்துகொண்டேன். வெற்றிமாறனிடம் இருந்து அப்படி ஒரு வாய்ப்பு வரும் போது அதனை என்னால் மறுக்க முடியவில்லை.
அதனைத் தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. சின்ன வயதில் இருந்து பார்த்து வளர்ந்த விஜய் சாரின் படத்தில் நடிக்கிறேன். அதுவும் அவருடைய கடைசி படத்தில் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் உசுரே, வெற்றிமாறன் தயாரிப்பில் பேட் கேர்ள் (Bad Girl), இயக்குநர் விஜய் தயாரிப்பில் ’இருள் கொண்ட வானம்’ போன்ற படங்களில் நடிக்கிறேன். மலையாளத்தில் விளாயத் புத்தா (Vilayath Buddha) எனும் படத்தில் அறிமுகமாகிறேன். இதில் பிருத்விராஜ் சாருடன் இணைந்து நடிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.