ETV Bharat / state

கருணாநிதி நினைவு தினத்தில் நலத்திட்ட உதவி வழங்க இளைஞர் அணி முடிவு - திமுக தலைவர் கருணாநிதி

திருச்சி: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்க இளைஞரணி முடிவு செய்துள்ளது.

dmk youth wing meeting
dmk youth wing meeting
author img

By

Published : Aug 6, 2020, 2:54 PM IST

திமுகவின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ் குமார் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும், திருவெறும்பூர் எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு நாளை (ஆகஸ்ட் 7ஆம் தேதி) ஒன்றியம், பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் அவரது திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.

மருத்துவர்கள், செவிலியர், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரை கௌரவிக்கும் விதமாக நலத்திட்ட உதவிகள், ஆதரவற்ற இல்லங்களில் உணவுகள் வழங்க வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் இளைஞரணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: அதிமுகவில் இணைந்த 100க்கும் மேற்பட்ட திமுகவினர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.