ETV Bharat / state

விமரிசையாக நடைபெற்ற திருச்சி திருவெறும்பூர் ஜல்லிக்கட்டு! - latest tamil news

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைபாரில் கிராமத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருச்சி திருவெறும்பூர் ஜல்லிக்கட்டு போட்டி

author img

By

Published : Jan 22, 2023, 6:02 PM IST

திருச்சி திருவெறும்பூர் ஜல்லிக்கட்டுப் போட்டி

திருச்சி: திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைபாரில் ஜல்லிக்கட்டுப்போட்டி இன்று காலை தொடங்கியது. ஜல்லிக்கட்டுப் போட்டியை ஆர்டிஓ தவச்செல்வம் தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் திருச்சி மாவட்டம் மட்டுமின்றி புதுக்கோட்டை, தஞ்சை, கரூர், மதுரை உள்ளிட்டப் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 800 ஜல்லிக்கட்டு காளைகள் கலந்து கொண்டன. மேலும் 420 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

முதலாவதாக முனியாண்டவர் கோயில் மாடு அவிழ்த்து விடப்பட்டது. அதன் பிறகு ஜல்லிக்கட்டு காளைகள் வரிசை முறையாக அவிழ்த்து விடப்பட்டன. இதில், திருச்சி கால்நடை துறை இணை இயக்குநர் மருதராஜ் தலைமையிலான மருத்துவக் குழுவினர், மாடுகளுக்கு போதை பொருள் கொடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து சோதனை செய்தனர்.

மேலும் திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் பாலாஜி தலைமையிலான மருத்துவக் குழுவினர், மாடுபிடி வீரர்கள் போதையில் உள்ளார்களா என்பது குறித்தும், ஜல்லிக்கட்டுப் போட்டியில் காயமடைந்தவர்களுக்கு முதல் கட்ட மருத்துவ சிகிச்சையும் அளித்தனர். ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கும் காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஏடிஎஸ்பி குத்தலிங்கம் தலைமையிலான 353 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: கரூரில் ஜல்லிக்கட்டு போட்டி: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.