ETV Bharat / state

மனைவியை தாக்கிய மின்சாரம் - காப்பாற்றச் சென்ற கணவனும் உயிரிழந்த சோகம்! - Husband wife death earth wire shock

திருச்சி: லால்குடி அருகே மின்சாரம் தாக்கி கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

trichy
author img

By

Published : Nov 21, 2019, 7:33 AM IST

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அகலங்கநல்லூர் ஊராட்சியில் உள்ளது தாரானூர் கிராமம். இந்த கிராமத்தின் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன்(36). இவரது மனைவி சந்தியா (30). இவர்களுக்கு சந்தோஷ் (4), சர்வேஷ் (3) என இரு மகன்கள் உள்ளனர்.

மகேந்திரனும் அவருடைய அண்ணன் சக்திவேலும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். மகேந்திரனும், அவரது மனைவி சந்தியாவும் தினக்கூலி வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில், சந்தியா வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்த போது, வீட்டின் சந்துப் பகுதியில் மின்சாரம் செல்லும் எர்த் வயர் பகுதியில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதை கவனிக்காத சந்தியா சந்துக்குள் சென்றபோது எர்த் வயரிலிருந்து மின்சாரம் பாய்ந்தது.

மனைவியின் அலறல் சத்தம்கேட்டு காப்பாற்றச் சென்ற மகேந்திரன் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனைக்கண்ட மகேந்திரனின் அண்ணன் சக்திவேல் அவர்களைக் காப்பாற்ற முயன்றார். ஆனால் அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டனர்.

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தம்பதியினர்

இதில், கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த சக்திவேலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த லால்குடி காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த இச்சம்பவம் கிராமத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மின்சாரம் செலுத்தி மனைவியை கொலை செய்ய முயற்சி: 5 மாதம் கழித்து இளைஞர் கைது

Intro:திருச்சி அருகே மின்சாரம் தாக்கி கணவன் மனைவி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Body:திருச்சி:
திருச்சி அருகே மின்சாரம் தாக்கி கணவன் மனைவி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அகலங்கநல்லூர் ஊராட்சியில் உள்ள தாரானூர் கிராமம். இந்த கிராமத்தின் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் மகேந்திரன்(36). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சந்தியா (30). இவர்களுக்கு சந்தோஷ் (4), சர்வேஸ் (3) என இரு மகன்கள் உள்ளனர்.
மகேந்திரனும் அவருடைய அண்ணன் சக்திவேலும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். மகேந்திரனும், அவரது மனைவி சந்தியாவும் காலையில் அப்பகுதியில் உள்ள வயலில் தினக் கூலி வேலைக்கு சென்றுவிட்டு் மாலையில் வீடு திரும்பினர். சந்தியா வீட்டு வேலைகளை செய்தபோது வீட்டின் சந்து பகுதியில் மின்சாரம் செல்லும் எர்த் ஒயர் பகுதியில் மின் கசிவு ஏற்ப்பட்டுள்ளது. இதை கவனிக்காத சந்தி்யா சந்துக்குள் சென்ற போது எரத் ஒயர் பட்டு சந்தியா மீது மின்சாரம் தாக்கியது. மனைவியின் அலரல் சத்தம் கேட்டு காப்பற்ற சென்ற கணவன் மீதும் மின்சாரம் பாய்ந்த்து. இதனைக் கண்ட மகேந்திரனின் அண்ணன் சக்திவேல் காப்பாற்ற சென்ற போது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டனர். இதில் கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த சக்திவேலை மீட்டு திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்த லால்குடி போலீசார் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
இச்சம்பவத்தால் கிராமமே சோகத்தில் முழ்கியது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.