ETV Bharat / state

திருச்சியில் 5 கடைகளுக்குச் சீல்: இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை - திருச்சியில் இந்து சமய அறநிலையத்துறை திடீர் நடவடிக்கை

திருச்சியில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில் நிலங்களில் கடை வாடகை நிலுவைத் தொகை செலுத்தாத ஐந்து கடைகளுக்குச் சீல்வைத்து அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

திருச்சியில் 5 கடைகளுக்கு சீல்
திருச்சியில் 5 கடைகளுக்கு சீல்
author img

By

Published : Feb 13, 2022, 7:51 PM IST

திருச்சி: வையம்பட்டி அடுத்த செக்கணம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் அருள்மிகு செம்மலை கன்னிமார் மாரியம்மன், கருப்பசாமி கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள 28 கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் வாடகைத் தொகை அதிகமாக இருப்பதாகக் கூறி கடந்த சில ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் கடைக்காரர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையிலிருந்து வரும் நிலையில், வாடகை நிலுவைத் தொகையைச் செலுத்த வாடகைதாரர்களுக்கு அறிவிப்பு வழங்கியும், நேரில் அறிவுறுத்தியும் சிலர் வாடகையைச் செலுத்த முன்வரவில்லை.

இதையடுத்து கடை வாடகை உடனடியாக வசூல் செய்திடவும், வாடகை செலுத்த மறுக்கும் கடைக்காரர்களின் கடைகளுக்குச் சீல்வைத்திடவும் உயர் அலுவலர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று (பிப்ரவரி 12) அதிக வாடகை நிலுவைத் தொகை வைத்திருந்த அக்பர் பாட்சா, ஸ்டீபன் சபரிராபர்ட், மணிக்குமார், நித்தியானந்தன், ஷாகுல்ஹமீது உள்ளிட்ட ஐந்து பேரின் கடைகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் அலுவலர்கள் சீல்வைத்தனர்.

மற்ற வாடகைதாரர்கள் மூலம் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 760 ரூபாய் வசூல்செய்யப்பட்டது. இதில் மணப்பாறை ஆய்வாளர் எஸ். விஜயகுமார், வையம்பட்டி ஆய்வாளர் பிரேமலதா, மருங்காபுரி ஆய்வாளர் ஜெயநிலா, துவரங்குறிச்சி ஆய்வாளர் திருகனிக்குமார், செயல் அலுவலர் இரா. ஜீவானந்து, திருக்கோயில் பணியாளர்களுடன் இருந்தனர்.

இதையும் படிங்க: துணிக்கு இஸ்திரி போட்டு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.