ETV Bharat / state

'வணிகர்கள் நலன் காக்க வருந்தமாட்டேன்...' - தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு செயலர் விளக்கம்! - கத்தார் வசந்தபவன் ஷோட்டல் உரிமையாளர்கள்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் தங்களை துன்புறுத்துவதாக சிலர் அளித்த புகார் குறித்து, கோவிந்தராஜூலு மற்றும் கத்தார் வசந்தபவன் ஹோட்டல் உரிமையாளர்கள் நமது ஊடகத்திடம் விளக்கம் அளித்துள்ளனர்.

Govindarajulu  Qatar Vasanthapavan hotel owners  trichy collector office  family petition  வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர்  கோவிந்தராஜூலு  கத்தார் வசந்தபவன் ஷோட்டல் உரிமையாளர்கள்  திருச்சி ஆட்சியரிடம் கோரிக்கை மனு வைத்த குடும்பம்
கோவிந்தராஜூலு
author img

By

Published : May 8, 2022, 10:14 PM IST

திருச்சி: திருச்சி மாவட்டம், கிராப்பட்டியைச் சேர்ந்தவர், ரவி (52). கத்தார் நாட்டிலுள்ள வசந்தபவன் ஹோட்டலில், கடந்த 15 ஆண்டுகாலம் மேற்பார்வையாளராகப் பணியாற்றியுள்ளார். அந்த வேலையைவிட்டுவிட்டு திருச்சிக்கு வந்து மனைவி மற்றும் இருமகள்களுடன் வாழ்ந்துவருகிறார். ரவியைத் தொடர்ந்து, மேலும் இரண்டு ஊழியர்கள் வேலையை விட்டுவிட்டு தமிழ்நாட்டுக்கு வந்திருக்கின்றனர்.

ஊழியர்கள் தொடர்ந்து வேலையை விட்டுச்செல்வதால் வசந்தபவன் உரிமையாளர் ராஜேந்திரன் மன வேதனையடைந்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலுவிடம், வசந்தபவன் உரிமையாளர் ராஜேந்திரன் தனது வேதனையைத் தெரிவித்திருக்கிறார்.

பின்னர் இவர்கள் திட்டமிட்டு, கத்தார் நாட்டில் வசந்தபவன் ஹோட்டலில் மூன்றரை கோடி ரூபாய் முறைகேடு செய்துவிட்டதாக ரவி மீது குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்நிலையில், திருச்சியில் உள்ள குரு ஹோட்டலுக்கு ரவி மற்றும் அவரது மனைவியை அழைத்து தனியறையில் அடைத்து வைத்து, பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதனால் ரவி தனது குடும்பத்தினருடன், திருச்சி ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுக்க வந்துள்ளார். அதில், “தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் தங்களை துன்புறுத்துகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். அல்லது எங்களை கருணைக்கொலை செய்துவிடுங்கள்'' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து கோவிந்தராஜூலு மற்றும் கத்தார் வசந்தபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜேந்திரன் நம்மை அழைத்து தன்னிலை விளக்கம் அளித்தார்கள். அதில், “வணிகர்கள் நலன் காக்க வருந்தமாட்டேன். கட்டப்பஞ்சாயத்து என்கிற வார்த்தையே தவறு” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் காணொலி நம் ஈடிவி பாரத் தமிழ்நாடு தள வாசகர்களுக்காக....

கோவிந்தராஜூலு மற்றும் கத்தார் வசந்தபவன் ஹோட்டல் உரிமையாளர்கள் நமது ஊடகத்திடம் தன்னிலை விளக்கம் அளித்தனர்.

இதையும் படிங்க: கொலை செய்யப்பட்ட தம்பதி உடல்கள் பண்ணை வீட்டில் தோண்டி எடுப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.