ETV Bharat / state

தேசிய நெடுஞ்சாலையில் கார்கள் மோதி கோர விபத்து - 4 பெண்கள் உயிரிழப்பு - women died Accident on National Highway in trichy

திருச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார்கள் மோதிய கோர விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்தனர்.

கோர விபத்து
கோர விபத்து
author img

By

Published : Oct 26, 2022, 10:34 PM IST

திருச்சி: துவரங்குறிச்சி அடுத்த செவந்தாம்பட்டி பிரிவு சாலையில் ராஜபாளையத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த TN 69 AW 6248 பதிவெண் கொண்ட கார் நிலை தடுமாறி சென்டர்மீடியனில் ஏறி எதிர் திசையில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த TN 45 BA 9909 பதிவெண் கொண்ட இன்னோவா கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

அதனை தொடர்ந்து மதுரை நோக்கி சென்ற மற்றொரு காரும் இன்னோவா காரின் மீது மோதியது. இந்த கோர விபத்தில் திருச்சி நவல்பட்டு பகுதியைச் சேர்ந்த மங்கையர்கரசி (64), ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த பூஜா (20) மற்றும் ரஞ்சனா (20) உள்ளிட்டோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோர விபத்து

தகவலின் மேல் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற துவரங்குறிச்சி தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட முதலுதவி சிகிச்சையின் போது திருச்சியைச் சேர்ந்த பத்மா (61) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் இந்த விபத்தில் காயமடைந்த நபர்களில் இரண்டு பேர் மணப்பாறை அரசு மருத்துவமனையிலும், இரண்டு பேர் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர விபத்தில் மூன்றாவதாக மோதிய காருக்குள் இருந்தவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. மேலும் இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: பரங்கிமலை மாணவி கொலை வழக்கு: கொலையாளியை ஒரு நாள் காவலில் எடுத்துவிசாரிக்க அனுமதி

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.