ETV Bharat / state

வேலைக்காக மலேசியா சென்ற மகன் மாயம்: தந்தை கண்ணீருடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு! - youth missing after went to Malaysia for work

வேலைக்காக மலேசியா சென்ற மகனை கண்டுபிடித்து தருமாறு தந்தை திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலைக்காக மலேசியா சென்ற மகன் மாயம்: தந்தை கண்ணீருடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

author img

By

Published : Jul 31, 2023, 5:42 PM IST

திருச்சி: வேலைக்காக மலேசியா நாட்டிற்கு சென்ற மகனை கண்டு பிடித்து தருமாரு இன்று (31.07.2023) மக்கள் குறைதீர் கூட்டத்தில் தந்தை மனு அளித்துள்ளார். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே மேல சிந்தாமணி எனும் பகுதி உள்ளது. இங்கு உள்ள டீக்கடை ஒன்றில் சேதுராமன் (67) டீ மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு மணி எனும் மகன் உள்ளார். மணிக்கு சாவித்திரி எனும் மனைவியும், ஹேமஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் மணிக்கு இங்கு வேலை ஏதும் கிடைக்காததால் கடந்த 2020 ஆம் ஆண்டு கேட்டரிங் வேலைக்காக 80 ஆயிரம் ரூபாய் செலவு செய்து மலேசியா நாட்டிற்கு அவர் தந்தை அணுப்பி வைத்துள்ளார்.

அங்கு சென்ற அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருவதாக அங்கு வேலை பார்த்த நண்பர்கள் கூறியுள்ளனர். அவரும் அடிக்கடி வீட்டுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். அப்போது அவர் தான் அங்கு கஷ்டப்படுவதாகவும் வேலை சரிவர கிடைக்காத காரணத்தினால் வறுமையில் வாடுவதாகவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஜோசியர் பேச்சைக் கேட்டு கருக்கலைப்பு செய்த பெண் பலி.. மெடிக்கல் உரிமையாளர் கைது; திருச்சியில் நடந்தது என்ன?

இதனால் குடும்பத்தினர் தங்கள் குடும்ப சூழ்நிலையை அவரிடம் எடுத்துச் சொல்லி வந்துள்ளனர். மாதந்தோறும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வந்த மணி கடந்த ஏழு மாதங்களாக குடும்பத்துடன் தொடர்பு கொள்ளவில்லை. அவரது செல்போன் எண்ணையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இது குறித்து அங்கு அவருடன் பணிபுரிந்த திருச்சியை சேர்ந்த நண்பர்கள் திருச்சி வந்தபோது அவர்களிடம் கேட்கையில் அவர்கள் அவரது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிலர் அழைத்து சென்றதாகவும் கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை சிந்தாமணி இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்‌ நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரை சந்தித்து மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் குடும்ப வறுமை காரணமாக மலேசியா நாட்டிற்கு வேலைக்காக சென்ற தன் மகன் மணி காணாமல் போனதாகவும் தன்னுடைய மகனின் நிலை குறித்து அறிந்து அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் மனுவில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஒடிஷாவில் பயங்கரம்: 14 வயது சிறுவன் நரபலி? - பெண் சாமியார் உள்பட 4 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.