ETV Bharat / state

அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.80 லட்சம் மோசடி: பகீர் பின்னணி - வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி

திருச்சியில் ஆதார் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞர்களிடம் 80 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த நபர் மீது திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 16, 2022, 5:33 PM IST

திருச்சி: மணல் வாரி துறை சாலை ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்து வருபவர், வேல்முருகன் (24). இதே பகுதியைச்சேர்ந்த பொறியியல் பட்டம் பெற்ற பல இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, கார்த்திக் என்ற பார்த்திபன் என்பவர் அங்கு விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களிடம் அறிமுகமாகியுள்ளார்.

அவர்களிடம் தான் மத்திய அரசில் உள்ள ஆதார் சேவையில் பணியாற்றி வருவதாகவும், தமிழ்நாட்டில் உள்ள அரசு பணிகளில் தன்னால் வேலை வாங்கித் தரமுடியும் எனவும் கூறியுள்ளார். இதனை நம்பிய 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அவரிடம் பணம் கொடுத்து வேலை வாங்கித் தரக்கோரியுள்ளனர்.

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.80 லட்சம் மோசடி

சுமார் 80 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்ற அவர், இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தராமல் பணத்தை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இன்று (நவ.16) பாதிக்கப்பட்ட ஆறு இளைஞர்கள் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

மேலும், இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்து தாங்கள் இழந்த பணத்தை மீட்டுத் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ரூ.1 லட்சத்திற்கு 8 மாதத்தில் ரூ.4 கோடி.. பிரபல நிறுவனம் பலே மோசடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.