கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அன்றாட வாழ்க்கையை நடத்தவே முடியாமல் ஏழை தொழிலாளர்கள் சிரமப்பட்டுவருகின்றனர். அதோடு தங்களது உயிரையும் பணயம் வைத்து தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு உதவிடும் வகையில் பல்வேறு அமைப்புகள் நலத்திட்டங்களை வழங்கி வருகின்றன.
அந்த வகையில் திமுகவின் திருச்சி பொன்மலை பகுதி செயலாளர் கொட்டப்பட்டு தர்மு தலைமையில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பொன்மலைப்பட்டியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு தூய்மைப் பணியாளர்களுக்கும், ஆட்டோ ஓட்டுநர்களும் அரிசி, மளிகை, காய்கறி, குளிர்பானங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினார். சமூக இடைவெளியுடன் இந்த நிவாரணப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: இரு வாரங்களுக்குப் பிறகு ஏர் இந்தியா விமானம் செயல்பட வாய்ப்பு!