மாவட்ட அளவிலான முதலாவது டேபிள் டென்னிஸ் போட்டி திருச்சியில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் 10,12,15,18,21 ஆகிய வயது பிரிவினருக்கு தனித்தனியாக, இருபாலருக்கும் போட்டிகள் நடைபெறுகின்றன.
இதில் 200க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். இன்றும், நாளையும் போட்டிகள் நடைபெறுகிறது. திருச்சி மாவட்ட நாயுடு மகாஜன சங்க 26ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு இந்தப் போட்டிகள் நடத்தப்படுகிறது.
திருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கத் தலைவர் ராஜரத்தினம் சார்பில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இறுதிப் போட்டிகள் நாளை நடைபெறும், இதனைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெறும்.
இதையும் படிங்க: மாநில அளவிலான ஜூடோ விளையாட்டுப்போட்டி - பள்ளி மாணவர்கள் பங்கேற்பு!