ETV Bharat / state

விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் முடிவு - ஊழியர்கள் உண்ணாநிலை

திருச்சி: விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் முடிவை கண்டித்து திருச்சி விமான நிலைய ஊழியர்கள் தொடர் உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

staffs-conducting-hunger-strike
author img

By

Published : Sep 25, 2019, 12:11 PM IST

லாபத்தில் இயங்கும் பல்வேறு விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. அதன்படி ஏற்கனவே அகமதாபாத், ஜெய்பூர், கவுகாத்தி, லக்னோ, மங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய ஆறு விமான நிலையங்கள் தனியார்மயமாக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக 11 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து திருச்சி விமான நிலைய ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் திருச்சி விமான நிலைய அனைத்து ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று தொடர் உண்ணாநிலை போராட்டம் தொடங்கியது.

அமைப்பின் தலைவர் யுவ ராஜேஷ் தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் ஏராளமான விமான நிலைய ஊழியர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

விமான நிலைய ஊழியர்கள் உண்ணாவிரதம்

போராட்டத்திற்கிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த யுவ ராஜேஷ், லாபத்தில் இயங்கிவரும் விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுவருகிறது. இரண்டாம்கட்டமாக தனியார்மயமாக்கப்படும் 11 விமான நிலையங்களில் திருச்சி விமான நிலையமும் பட்டியலில் இடம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

இதனைக் கண்டித்து கறுப்புப் பட்டை அணிந்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். அடுத்து ஆர்ப்பாட்டம், உள்ளிருப்புப் போராட்டம் உள்பட பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. தற்போது தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியுள்ளோம்.

மூன்று நாட்கள் இந்த உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறும். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து டெல்லியில் உள்ள தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார்.

இதையும் படிங்க...

18 மெட்ரோ ரயில் நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைப்பு!

Intro:தனியார் மயத்தை கண்டித்து திருச்சி விமான நிலைய ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று தொடங்கினர்.

Body:திருச்சி:
தனியார்மயத்தை கண்டித்து திருச்சி விமான நிலைய ஊழியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை இன்று தொடங்கினர்.
லாபத்தில் இயங்கும் விமான நிலையங்களை
நாட்டில் உள்ள அகமதாபாத், ஜெய்ப்பூர், கவுகாத்தி, லக்னோ மங்களூர், திருவனந்தபுரம் ஆகிய 6 விமான நிலையங்கள் ஏற்கனவே தனியார் மயமாக்கப்பட்டு உள்ளது. அடுத்த கட்டமாக 11 விமான நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இதை கண்டித்து திருச்சி விமான நிலைய ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வகையில் தனியார் மயமாக்குவதை கண்டித்து திருச்சி விமான நிலைய அனைத்து ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.
அமைப்பின் தலைவர் யுவராஜேஷ் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் ஏராளமான விமான நிலைய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது யுவராஜேஷ் செய்தியாளரிடம் பேசுகையில், லாபத்தில் இயங்கி வரும் விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இரண்டாம் கட்டமாக தனியார் மயமாக்கப்படும் 11 விமான நிலையங்களில் திருச்சி விமான நிலையமும் இந்த பட்டியலில் இடம் பெற்று இருப்பது தெரியவந்தது. இதை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். அடுத்து ஆர்ப்பாட்டம், உள்ளிருப்பு போராட்டம் உட்பட பல போராட்டங்கள் நடத்தப்பட்டது. தற்போது தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப் பட்டுள்ளது. மூன்று நாட்கள் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து டெல்லியில் உள்ள தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார்.

Conclusion:அடுத்தகட்ட போராட்டம் குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று யுவராஜேஷ் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.