ETV Bharat / state

மணப்பாறை அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பு சிறப்பு கண்காணிப்பு அலுவலர் ஆய்வு! - special monitoring

மணப்பாறை, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பு சிறப்பு கண்காணிப்பு அலுவலர் ரீட்டா ஹரிஸ் தாக்கர் ஆய்வு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பு சிறப்பு கண்காணிப்பு -  அலுவலர் ரீட்டா ஹரிஸ் தாக்கர் ஆய்வு
மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பு சிறப்பு கண்காணிப்பு - அலுவலர் ரீட்டா ஹரிஸ் தாக்கர் ஆய்வு
author img

By

Published : May 9, 2021, 12:09 PM IST

திருச்சி: மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில், கரோனா தடுப்பு சிறப்பு கண்காணிப்பு அலுவலரும், அரசின் சிறப்பு செயலாளருமான ரீட்டா ஹரிஸ் தாக்கர் இன்று (மே 9) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் மருத்துவர் கார்த்திகேயன், கண்காணிப்பு அலுவலரை வார்டு வார்டாக அழைத்து சென்று கரோனா நோயாளிகளுக்கான படுகை வசதிகள், ஆக்சிஜன் உருளைகளின் இருப்பு குறித்தும் தகவல் மற்றும் விளக்கமளித்தார்.

அப்போது கண்காணிப்பு அலுவலர் கூறுகையில், ’ கரோனா தொற்று அதிகரித்து கொண்டு தான் வருகிறது. இதனால், தொற்றாளர்களின் எண்ணிக்கையினை கருத்தில் கொண்டு மணப்பாறையில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்குள்ளான நோயாளிக்களுக்கான படுகை வசதிகள், அவர்களுக்கான ஆக்சிஜன் உருளைகள் கையிருப்புகள் ஆகியவை குறித்தும், மணப்பாறையில் கரோனா சிகிச்சை சிறப்பு முகாம் அமைப்பதற்கான முயற்சிகள் குறித்தும் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும் அதற்கான அறிவிப்புகளை மாவட்ட ஆட்சியர் தெரிவிப்பார்’’ என்று கூறினார்.

இந்நிகழ்வில் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் அன்பழகன், வட்டாட்சியர் எம். லஜபதிராஜ், நகராட்சி ஆணையர்(பொ) க. முத்து, வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சந்தோஷ், வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: கோவிட்-19 களப்பணியில் 42 விமானப்படை விமானங்கள்!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.