திருச்சி மாவட்ட ஆட்சியரகம் எதிரில் உள்ள போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு சிஐடியு மாநகர் மாவட்டக் குழு சார்பில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி வரும் மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக தொழிற்சங்கத்தின் தொமுச பேரவைச் செயலாளர் எத்திராஜ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ரயில்வே துறை, போக்குவரத்துத் துறை, விமானத்துறை, நிலக்கரி சுரங்கம் ஆகியவற்றை தனியாருக்குத் தாரை வார்ப்பதைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-க்கு 4ஜி உரிமத்தை உடனே வழங்கிட வலியுறுத்தியும் முழக்கமிட்டனர்.
இந்த ஆர்பாட்டத்தில், சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜ், தொமுச மாவட்ட கவுன்சில் தலைவர் குணசேகரன், நெல்சன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.