ETV Bharat / state

ஐந்து வருடத்தில் முடிந்த கான்கிரீட் பாலத்தின் ஆயுள் - ஊழலின் உச்சக்கட்டமா? - கொட்டப்பட்டி

திருச்சி: கட்டி ஐந்து வருட காலமே ஆன பாலம், சேதம் அடைந்ததுள்ள சம்பவம் கொட்டப்பட்டி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலம்
author img

By

Published : May 1, 2019, 9:23 AM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மொண்டிப்பட்டி ஊராட்சிக்குட்பட்டது கொட்டப்பட்டி கிராமம். இங்குள்ள பிள்ளையார் கோயில் தெரு சாலையின் முகப்பு பகுதியில் உள்ள பாலம் சுமார் ஆறு மாதங்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இறுதி ஊர்வலம் எடுத்துச் செல்லக்கூடிய பாதையாகவும், நடுநிலைப் பள்ளிக்கு செல்லும் பாதையாகவும் இது உள்ளது.

இப்பாலத்தை இரவு நேரங்களில் வயதானவர்கள் கடந்து செல்ல மிகவும் சிரமப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், ஊராட்சி ஒன்றியத்தால் கட்டப்படும் கான்கிரீட் பாலங்களின் ஆயுள் குறைந்தபட்சம் 20 முதல் 25 ஆண்டுகள் நீடிக்கும் நிலையில், கட்டிய 5 ஆண்டுகளில் இப்பாலம் சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐந்து வருடத்தில் முடிந்த கான்கிரீட் பாலத்தின் ஆயுள் - ஊழலின் உச்சக்கட்டமா?

மாவட்ட நிர்வாகம் விரைந்து உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தை சீர் செய்து தர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Intro:ஐந்து வருடத்தில் முடிந்த கான்கிரீட் பாலத்தின் ஆயுள் - ஊழலின் உச்சக்கட்டமா?Body:திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மொண்டிப்பட்டி ஊராட்சிக்குட்பட்டது கொட்டப்பட்டி. இங்குள்ள பிள்ளையார் கோவில் தெரு சாலையின் முகப்பு பகுதியில் உள்ள பாலத்தில் சுமார் கடந்த ஆறு மாதங்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது.இப்பகுதி பொதுமக்கள் இறுதி ஊர்வலம் எடுத்துச் செல்லக்கூடிய பாதையாகவும், இப்பகுதியில் அமைந்துள்ள நடுநிலைப் பள்ளிக்கு செல்லும் பாதையாகவும் உள்ளது. இப்பாலத்தை இரவு நேரங்களில் வயதானவர்கள் கடந்து செல்ல மிகவும் சிரமப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் ஊராட்சி ஒன்றியத்தால் கட்டப்படும் கான்கிரீட் பாலங்களின் ஆயுள் குறைந்தது 20 முதல் 25 ஆண்டுகளாக இருக்கும் நிலையில், கட்டிய 5 ஆண்டுகளில் சேதமடைந்துள்ள இப்பாலம் இப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாவட்ட நிர்வாகம் விரைந்து உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தை சீர் செய்து தர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.