திருச்சி: அரியமங்கலம் கல்லாங்குத்து செல்லும் சாலையில் உள்ள குப்பைமேட்டில் பெண் சிசுவின் சடலமொன்று கிடப்பதாக அப்பகுதியினர் அரியமங்கலம் காவல் துறையினருக்கு நேற்று (மே.16) இரவு தகவல் கொடுத்தனர்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற அரியமங்கலம் காவல் துறையினர் பிறந்து சில மணி நேரங்களே ஆன தொப்புள் கொடியுடன் இறந்த நிலையில் கிடந்த பெண் சிசுவின் சடலத்தை மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து சிசுவின் சடலத்தை உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குப்பையில் கிடந்த பெண் சிசு யாருடையது.. இங்கு எப்படி வந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருநெல்வேலி கல்குவாரி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம் - ஸ்டாலின் அறிவிப்பு