கரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மே 3ஆம் தேதி வரையிலான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருச்சி நகரின் முக்கியப் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி - திருவெறும்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் பொய்யாமொழி, அரியமங்கலம் பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க:திருநங்கையின் கரோனா விழிப்புணர்வுப் பாடல்!