ETV Bharat / state

இரண்டு ஊர்களுக்கு இடையேயான தகராறாக மாறிய ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி முன்விரோதம்

ஆடல் பாடல் கலை நிகழ்ச்சியால் முன்விரோதம் காரணமாக, இரண்டு ஊர் இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இரண்டு பேரை, போலீசார் கைது செய்து உள்ளனர்.

Animosity due to music performance  Two people arrested in a dispute between two towns
ஆடல் பாடல் கலை நிகழ்ச்சியால் முன்விரோதம் - இரண்டு ஊர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இரண்டு பேர் கைது.
author img

By

Published : Jul 4, 2023, 3:20 PM IST

திருச்சி: தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறும் கோவில் திருவிழாக்களில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை புறந்தள்ளி ஆடல் பாடல் நிகழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்தது. சினிமா பாடலுக்கு டான்ஸ் ஆடுவதாக இருந்த ஆடல் பாடல் நிகழ்ச்சி, காலப்போக்கில் பெண்கள் அரைகுறை ஆடைகளை உடுத்திக் கொண்டு ஆடுவது, இரட்டை அர்த்த வசனம் உள்ள பாடல்களுக்கு மது அருந்தியவாறு சக ஆண் நடன கலைஞர்களுடன் கட்டிப்பிடித்து ஆடுவது என ஆபாசத்தின் உச்சத்திற்கே சென்றது.

இரவு 10 மணிக்கு மேல் நடைபெறும் இந்த ஆடல் பாடல் நிகழ்ச்சிகளால், இளைஞர்களிடையே கலாச்சார சீரழிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்களால் பல்வேறு வழக்குகள் போடப்பட்டு அதன் எதிரொலியாக ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு என சில விதிமுறைகளை வரையறுத்து, அதனை காவல்துறை கண்காணிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதனடிப்படையில் கோயில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்குவது குறித்த வழிகாட்டுதல்களாக ஆடல் பாடல் நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு மேல் நீடிக்க கூடாது, பெண் கலைஞர்களை ஆபாச ஆடையில் சித்தரிக்கவோ,வேறு ஏதும் இன்னல்களை ஏற்படுத்தவோ கூடாது. இரட்டை அர்த்த பாடல், நிகழ்ச்சியில் இடம்பெறக் கூடாது, அனுமதி கோரிய மனுவின் மீதான முடிவினை 7 நாட்களுக்குள் விழா குழுவுக்கு தெரிவிக்க வேண்டும்.

7 நாட்களில் நடவடிக்கை இல்லையென்றால் அனுமதி அளிக்கப்பட்டதாக கருதி நிகழ்ச்சியை நடத்தி கொள்ளலாம் என வரையறைகளை வெளியிட்டது. அதனைப் பின்பற்றி ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கி அந்த வழிகாட்டுதல்களை கண்காணிக்க வேண்டும் என முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கி இருந்தார்.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த குளவாய்பட்டியில் தொட்டிச்சி அம்மன் ஆலய திருவிழா கடந்த 26ம் தேதி நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு, அன்று இரவு ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி நடத்திக் கொள்ள மணப்பாறை காவல்துறையினர் அனுமதி வழங்கி இருந்தனர்.அனுமதியின் படி நடைபெற்ற ஆடல் பாடல் கலை நிகழ்ச்சியின் போது மறவனூர் மற்றும் குளவாய்ப்பட்டி இளைஞர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 02ஆம் தேதி) இரவு குளவாய்பட்டியைச் சேர்ந்த கண்ணன் (23) என்ற இளைஞர் மறவனூர் சென்ற போது அப்பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (30), நவீன் (30), தேவராஜ் (31), கேசவராஜ் (25) உள்ளிட்ட நான்கு பேரும் கண்ணனை மறித்து கல் மற்றும் கட்டையால் பலமாக தாக்கியுள்ளனர். இதில் தலையில் காயமடைந்த கண்ணன் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்து பின்னர், சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் கண்ணன் அளித்த புகாரின் பேரில், விசாரணையை தொடங்கிய மணப்பாறை காவல்துறையினர் மறவனூரைச் சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் தேவராஜை கைது செய்து அவர்கள் மீது தவறாக பேசுதல்,கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். புகாரில் உள்ள மேலும் இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக மருத்துவக் குழு விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.