ETV Bharat / state

'மக்களே ஒற்றைத்தலைமைதான் வேண்டும் என்கிறார்கள்' - ஈபிஎஸ்ஸுக்கு மேலும் ஒரு மாவட்டச் செயலாளர் ஆதரவு - திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் ப குமார் பேட்டி

அதிமுக மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் நம்பிக்கை இழந்து வருகிறது. ஒற்றைத் தலைமை என்பது காலத்தின் கட்டாயம், ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி செயல்பட வேண்டும் என்று திருச்சி அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ப.குமார் தெரிவித்தார்.

ப.குமார் பேச்சு
ப.குமார் பேச்சு
author img

By

Published : Jun 19, 2022, 6:16 PM IST

திருச்சி: அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிமுக அலுவலகத்தில் திருச்சி அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ப.குமார் இன்று (ஜூன் 19) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் கூறுகையில், "அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். இதனை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளோம். 75 எம்எல்ஏக்களுடன் அதிமுக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும்.

அதிமுக இரண்டு கோஷ்டிகளாக செயல்படுகிறது. திமுகவுடன் மென்மையான போக்கை கடைபிடிப்பவர்கள் ஒரு பக்கமும்; கடுமையான போக்கை கடைபிடிப்பவர்கள் ஒரு பக்கமும் உள்ளனர். அதிமுகவிற்காக உழைக்கக்கூடியவர்கள் ஒரு பக்கமும், எந்த வேலையும் செய்யாமல் அமர்ந்திருப்பவர்கள் ஒரு பக்கமும் உள்ளனர்.

ஒற்றைத் தலைமை - கடைக்கோடி தொண்டனின் விருப்பம்: நடந்து முடிந்த உட்கட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்மொழிய, வழி மொழிய ஆதரவு இல்லாதவர்களுக்கு அதிமுக தலைமை பதவியை அறிவிக்கிறது. இதனை யாராவது கண்டித்தால் அவர் அடுத்த அணிக்குச்சென்று விடுகிறார். கோஷ்டி அரசியல் அதிமுகவிற்கு பின்னடைவை உருவாக்கும். அதிமுக மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் நம்பிக்கை இழந்து வருகிறது. கட்சியை புத்துணர்ச்சியோடும் எழுச்சியோடும் வீறுநடை போட வேண்டிய நிலை உள்ளது. திமுக எதிர்ப்பில் ஈபிஎஸ் உறுதியாக இருக்கிறார்.

ப.குமார் பேச்சு

அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்பது தான் கடைக்கோடி தொண்டனின் மன நிலை. கடந்த நான்கரை ஆண்டுகளில் முதலமைச்சர் பதவியில் துணிவோடும் தனித்தன்மையோடும் செயல்பட்டவர் ஈபிஎஸ். ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி செயல்பட வேண்டும். அதுவே, எங்களின் விருப்பம்" என்று தெரிவித்தார்.

புகழேந்தி ஒரு பப்பு: அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பாஜகவின் தலையீடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அது குறித்து கட்சித் தலைமையிடம் தான் கேட்க வேண்டும் எனப் பதிலளித்தார். அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி கருத்து குறித்த கேள்விக்கு புகழேந்தி ஒரு 'பப்பு' என பதிலளித்தார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது திருவெறும்பூர் அதிமுக பகுதிச் செயலாளர் பாஸ்கர், பொன்மலை பகுதி செயலாளர் பாலு, திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கார்த்தி மற்றும் வட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: ஓபிஎஸ்ஸின் கோட்டை வலுவிழக்கிறதா? ஈபிஎஸ்ஸை ஆதரித்த தேனி மாவட்ட அதிமுகவினர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.