ETV Bharat / state

இயற்கை விவசாயத்தை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் - கருணாஸ் கோரிக்கை - Actor Karunas about TN Govt

தமிழ்நாட்டில் இயற்கை முறை விவசாயத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு நடிகர் கருணாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இயற்கை விவசாயத்தை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் - கருணாஸ் கோரிக்கை

author img

By

Published : Apr 28, 2023, 4:34 PM IST

நடிகர் கருணாஸ் செய்தியாளர் சந்திப்பு

திருச்சி: திருச்சி மத்தியபேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில், தனியார் ஊடகத்தின் சார்பில் வேளாண்மை கண்காட்சி தொடக்க விழா இன்று (ஏப்ரல் 28) நடைபெற்றது. இந்த வேளாண்மை கண்காட்சி, நாளை மறுநாள் (ஏப்ரல் 30) வரை தொடர்ந்து 3 நாட்கள் டைபெற உள்ளது. இந்த நிலையில், முதல் நாளான இன்று திரைப்பட நடிகரும், இயற்கை விவசாயியுமான கருணாஸ் கலந்து கொண்டு வேளாண்மைக் கண்காட்சியைப் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ், “கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் ஜார்க்கண்ட் போன்ற பல்வேறு மாநிலங்களில் அரசே பாரம்பரிய விவசாயத்தை முன்னிலைப்படுத்துகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு அதற்கு நேர் மாறாக செயல்படுகிறது. எனவே, தமிழ்நாடு அரசு மரபு சார்ந்த பாரம்பரிய இயற்கை விவசாயத்தை முன்னிலைப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் மது குடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது.

எனவே, வரும் காலங்களில் மது அருந்துபவர்கள் உயிருடன் இருப்பதற்காக இயற்கை விவசாயத்தை பாதுகாத்து, உணவு உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும். மது என்னும் நஞ்சை தாராளமாக கொடுக்கும் தமிழ்நாடு அரசு, நஞ்சில்லா உணவை வழங்க முன் வந்து விவசாயிகளுக்கு ஊக்கம் தர வேண்டும். விவசாயத்திற்கு சட்டமன்றத்தில் பட்ஜெட் போடுகிறார்கள். வெளியே விவசாய நிலத்திற்கு லே - அவுட் போடுகிறார்கள். மக்கள் தான் சிந்திக்க வேண்டும்.

திட்டம் போடுகிற அதிகாரிகள், அதனை கட்டுப்படுத்துகிற அமைச்சர்களும், அவர்களை வழி நடத்தக் கூடிய முதலமைச்சர் தான் யோசிக்க வேண்டும். அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அவர்களுக்கு தெரியும். நான் சொன்னால் அது மாற்றம் வரப்போகிறதா அல்லது குற்றச்சாட்டை நிவர்த்தி செய்யப் போகிறார்களா?

மத்திய, மாநில அரசுக்கு நான் வைக்கிற ஒரு கோரிக்கை, இயற்கை விவசாயத்தை அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் முன்னெடுக்கும் இந்த நேரத்தில், தமிழ்நாட்டில் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நுழைவுக்கட்டணம் வசூலிப்பது உழவர் சந்தைக்கான நோக்கத்தையே சிதைக்கும்: உயர்நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.