திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகேயுள்ள மாலபட்டி பகுதியைச் சேர்ந்த பழனிசாமி என்பவரின் மகள் ஆனந்தி (20). இவர் பிப்ரவரி 14ஆம் தேதி தீ குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் ஆனந்தியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து வையம்பட்டி காவல் துறையினர் ஆனந்தியிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், பேசக்காம்பட்டியைச் சேர்ந்த அருண் பாண்டியன்(28) என்பவர் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதை மறைத்து ஆனந்தியை காதலித்து ஏமாற்றியது தெரியவந்தது.
இந்நிலையில், மருத்துவமனையில் ஆனந்தி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அருண் பாண்டியனை பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: புது மாப்பிள்ளை தீ குளித்து தற்கொலை முயற்சி!