ETV Bharat / state

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை - வீட்டில் கொள்ளை

திருச்சி: மணப்பாறை ஜீவா தெருவில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை மற்றும் ரூபாய் 50ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

gold theft in trichy
author img

By

Published : Jul 31, 2019, 10:37 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஜீவா தெருவைச் சேர்ந்தவர் சாந்தி. இவர் இன்று மதியம் வீட்டை பூட்டிவிட்டு அருகேயுள்ள தனது சகோதரர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின் சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய அவர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியானார். இதனையடுத்து வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோ கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 30 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கம் 2 வெள்ளிக் குத்துவிளக்கு 5 பட்டுப்புடவைகள் கொள்ளை போனது தெரியவந்தது.

கொள்ளையடிக்கப்படட வீடு

இந்த கொள்ளை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணப்பாறை போலீசார், தடயவியல் துறையினர் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடியிருப்புப் பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Intro:பட்டப்பகலில் துணிகரம் வீட்டின் பூட்டை உடைத்து 36 பவுன் நகை,50 ஆயிரம் ரொக்கம் கொள்ளை - போலீசார் விசாரணை.

Body:திருச்சி மாவட்டம் மணப்பாறை ஜீவா தெருவைச் சேர்ந்தவர் சாந்தி.இன்று மதியம் வீட்டை பூட்டிவிட்டு அருகேயுள்ள தனது சகோதரர் வீட்டிற்கு சென்று விட்டு சிறிது நேரம் கழித்து வீடு திரும்பியுள்ளார்.அப்போது வீட்டின் பூட்டு அறுக்கப்பட்ட கீழே கிடந்துள்ளது. இதனையடுத்து சாந்தி வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோ கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்து துணிகள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.இதனையடுத்து பீரோவில் இருந்த 30 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கம் 2 வெள்ளிக் குத்துவிளக்கு 5 பட்டுப்புடவைகள் கொள்ளை போனது தெரியவந்தது.இந்த கொள்ளை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணப்பாறை போலீசார் தடயவியல் துறையினர் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குடியிருப்புப் பகுதியில் நடந்த இந்த துணிகர சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.