திருச்சி விமான நிலையத்தில் நேற்றிரவு 11 மணி முதல் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மலேசியா, துபாய், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து வந்த மூன்று விமானங்களில், பயணித்த 150 பயணிகளிடம் சோதனை நடத்தினர்.
சோதனையில் இதுவரை சுமார் 100 பேரிடமிருந்து 30 கிலோ தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருவாய் புலனாய்வு பிரிவு துணை இயக்குனர் கார்த்திகேயன் தலைமையில் 22 அலுவலர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சோதனையானது இன்று மாலை வரை தொடரும் என தெரியவருகிறது. இது தவிர உடலில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்ததாக 12 நபர்களை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் 30 கிலோ தங்கம் பிடிபட்டது அலுவலர்கள், பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : விமானத்தின் கழிவறையில் கேட்பாராற்று கிடந்த 5.5 கிலோ தங்கக்கட்டிகள்!