திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரப்பகுதிகள் முழுவதும் விபத்தில்லா பகுதிகளாக மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆம்பூர் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினருடனும், ஆட்டோ ஓட்டுநர்களுடனும் ஆம்பூர் வட்டாட்சியர் பத்மநாபன், காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
அதில், நகர் பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்காகவும், ஆம்பூரின் முக்கியச் சாலைகளான உமர் சாலை, நேதாஜி சாலை, எஸ்.கே. சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சில இடங்களில் ஒருவழிச் சாலையாக மாற்றுவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் போக்குவரத்து காவலர்களுடன் 30-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள், வணிகர்கள் கலந்துகொண்டனர்.